Friday, November 21, 2008

ஈழப்பிரச்சனையில் இந்திய/தமிழக முரண்கள்-பகுதி5

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தத்தில் கையெழுத்திட்டு கொழும்புவிலிருந்து இந்தியா திரும்பிதும் இராஜீவ் காந்தி “உலக நாடுகளில் இதுபோன்றதொரு ஒப்பந்தம் இதுவரையில் உருவாகவில்லை” என்று மெரினா கடற்கரை கூட்டத்தில் முழங்கினார். வழக்கமாக இரு தரப்பினரிடையே யுத்தம் நடக்கும் போது இரு தரப்பினரையும் பேச வைத்து அவர்களுக்குள் ஒப்பந்தத்தை உருவாக்குவது தான் உலக நடைமுறை. ஆனால் இனப்பிரச்சனைக்கு காரணமான ஒரு தரப்பினரோடு மட்டும் பேசி, பேச்சுவார்த்தைக்கு உதவ முயற்சியெடுத்த மூன்றாம் நாடு ஒப்பந்தம் கையெழுத்திட்ட வரலாறு இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டிற்குமில்லை. விபரீதமான முறையில் உருவாக்கிய ஒப்பந்தத்தை தான் இன்றும் காங்கிரஸ்காரர்களும், மார்க்சீய கம்யூனிஸ்டுகளும், இந்து ராம் போன்ற ஊடகவியலாளர்களும் தமிழ்மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வாக முன்வைக்கின்றனர்.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் இடம்பெற்ற அம்சங்கள்:

  1. இலங்கையின் ஒற்றுமை, இறையாண்மையை பாதுகாப்பது.
  2. வடகிழக்கு மாகாண இடைக்கால கவுன்சிலை உருவாக்குவது. இந்த கவுன்சிலில் ஆளுநர் ஒருவர், முதலமைச்சர் ஒருவர் மற்றும் ஒரு அமைச்சரவை உருவாக்கப்படும்.
  3. 1988ம் ஆண்டு 31 டிசம்பருக்குள் கிழக்கு மாகாணத்தில் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி கிழக்கு பகுதி மக்கள்: வடக்கு மாகாணத்துடன் இணைந்து ஒரே மாகாணமாக செயல்பட விரும்புகிறார்களா; அல்லது தனி மாகாணமாக இடைக்கால மாகாண சபை உருவாக்க வேண்டுமா என்பதை முடிவு செய்வது. இந்த வாக்கெடுப்பை இலங்கை அதிபர் விரும்பினால் காலநீட்டிப்பு செய்யலாம்.
  4. வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தலை எந்த சூழ்நிலையிலும் 31டிசம்பர் 1987ற்குள் முடிப்பது. இந்திய அதிகாரிகள் பார்வையில் தேர்தல்.
  5. ஆகஸ்டு 15, 1987ற்குள் வடகிழக்கு மாகாணங்களின் அவசர சட்டங்கள் ரத்து செய்யப்படும். ஒப்பந்தம் நிறைவேறிய 48 மணி நேரத்திற்குள் இலங்கை தீவு முழுவதும் சண்டை நிறுத்தம் செய்யப்படும். போராளி குழுக்களின் அனைத்து ஆயுதங்களும் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும்.
  6. சண்டை நிறுத்தம் துவங்கிய 72 மணி நேரத்தில் இலங்கை இராணுவ மற்றும் பாதுகாப்பு படைகள் தங்களது முகாம்களுக்குள் முடங்க வேண்டும்.
  7. இலங்கையின் பிற பகுதிகளில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க பயன்படுத்தும் அமைப்புமுறையை வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் இலங்கை அரசு பயன்படுத்தவேண்டும்.
  8. இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு உடன்பட மறுக்கும் போராளி இயக்கங்களை கட்டுப்படுத்தும் படை நடவடிக்கைகளுக்கு இந்திய படைகள் உதவுவது. ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசுக்கு தேவைப்படும் இந்திய இராணுவ உதவிகள்.

இந்திய-இலங்கை ஒப்பந்தமானது சண்டையை நிறுத்துவது போன்ற மேலோட்டமான தோற்றத்தை உருவாக்கினாலும், தமிழர் தரப்பின் அரசியல் தன்னாட்சி உரிமையை மறுத்தது. நிரந்தரமான தீர்வை அடையும் முன்னரே போராளிகளின் ஆயுதங்களை பறித்து தன்னாட்சி உரிமையை அடைய போராடும் வழிமுறையை முடக்கியது. தமிழர்களின் அரசியல் குரலை உள்வாங்க மறுத்ததுடன் அவர்களது விருப்பத்திற்கு எதிரான திட்டங்களை இவ்வொப்பந்தம் முன்வைத்தது. அரசியல் அடிப்படையில் தமிழர்களது உரிமையை வழங்காமல் அவர்களது ஆயுதங்களை கழைந்து, முடக்குவதை புலிகளும், பிற இயக்கங்களும் எதிர்த்தனர். வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்தது தமிழர்களின் பூர்வீக தாயம், ஆகவே அவற்றை இருமாகாணங்களாக பிரித்து தமிழர்களை பிளவுபடுத்தக்கூடாது என்பதுவும் அவர்களது எதிர்ப்பாக அமைந்தது. ஆனால் தமிழர் தரப்பின் ஆயுத, அரசியல் பலத்தை முடக்க காத்திருந்த ஜெயவர்த்தனேவுக்கு இந்தியா செய்த ஒப்பந்தம் வலுவான ஆயுதமானது. இலங்கையின் அரசியல் சட்டம் பெரும்பான்மை இனமான சிங்களவர்களினால் மத்திய அரசில் தலைமையேற்கும் ஆட்சிமுறையை கொண்டிருக்கிறது. பேரினவாத எண்ணம் சிங்கள அரசியல் தலைவர்களிடமும், பௌத்த பிக்குகளிடமும், அரசியல் கட்சிகளிடமும் ஊறிப்போயிருக்கிறது. இலங்கை அரசு முறையில் அதிபருக்கான அதிகாரம் கட்டுப்பாடுகளற்ற அளவு குவிந்து கிடக்கிறது. 'இலங்கை சிங்களவர்களுக்குரியது, சிங்கள மொழி, பௌத்தம் மட்டுமே அதன் கலாச்சார அடையாளங்கள்' என்னும் இன அடிப்படைவாதமும், மகாவம்ச சிந்தனையும் இருக்கும் வரையில் தமிழர் ஒருவரை இலங்கையின் அதிபராக வாய்ப்புகளில்லை. அதிபர் மட்டுமல்ல முக்கிய துறைகளின் பதவிகளில், அமைச்சுகளில் சார்பற்று செயல்பட முடியாது.

அப்படிப்பட்ட சிங்கள பேரினவாத ஆதிக்கம் கொண்ட அமைப்பின் கீழ் தமிழர்களுக்கு அரசியல், பொருளாதார பலனற்ற மாகாணசபை தேர்தல்களை தீர்வாக முன்வைத்து, இரண்டு மாகாணங்களை வைத்து உங்களுக்குள் முடங்கி கொள்ளுங்கள் என்பது என்ன தீர்வு? இலங்கை-இந்திய ஒப்பந்தம் அதை தான் செய்தது.

இந்த ஒப்பந்தத்தின் முன்னர் இந்தியாவிற்கும்-ஜெயவர்த்தனேவுக்கும் மத்தியில் நடைபெற்ற கருத்து பரிமாற்றங்களில் இந்த சதி வெளிப்படுத்துகிறது. ஜே.என். தீட்சித் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவிடம் தெரிவித்த புதுடில்லியின் தேவைகளை குறிப்பிட்டுள்ளார்.

//When Jayewardene asked me to be specific about India's concerns, I said that Sri Lanka should give assurances to India on the following points:

  1. Reduction and phasing out of foreign military and intelligence personnel in Sri Lanka from the United Kingdom, Pakistan, Israel, South Africa and so on.
  2. Sri Lanka should reorganise its foreign and defence policies and reduce its involvement with USA, Pakistan, China, Israel and South Africa.
  3. Sri Lanka should give some assurances to India that its seaports and airports would not be utilised by foreign powers which were antagonistic towards India or which affected India's security interest negatively.
  4. Sri Lanka should fulfil the assurances which it gave in 1985 that India would be given an opportunity to maintain the Trincomalee Oil Tank Farms and that Sri Lanka would prevent foreign broadcasting stations like the Voice of America from being utilised for military purposes by countries like the United States, West Germany, etc.

Jayewardene said that these were excessive demands being made at the last moment. He was, however, reminded politely that these concerns of India were specifically mentioned to him between April 29 and May 5, 1985 by Minister Chidambaram. I recalled that I had repeated these concerns and requests to Jayewardene on June 9, 1985. Minister of State Natwar Singh did the same on November 24, and again between December 17 and 19, 1986. I pointed out that India's co-operation with Sri Lanka to solve the ethnic problem was predicated on Sri Lanka giving positive responses on these important concerns of India. The President consulted Minister Gamini Dissanayake and Finance Minister Romaie de Mel over the phone on these points raised by me. He then directed me to proceed immediately to the offices of the two Ministers to discuss details of how this particular issue should be dealt with.

At the end of the meeting with these Ministers, it was agreed that the points raised could be covered by means of a letter which should be carefully drafted. I said I would get a Draft Letter covering these points prepared when I proceeded to Delhi for consultations on the proposed Agreement and bring it back for approval...."// Reference : Assignment Colombo by J N Dixit, Konarak Publishers, 1998,

ராஜீவ் காந்தியும் இந்த விசயங்களை வலியுறுத்தி ஜெயவர்த்தனேவுக்கு கடிதம் எழுதியிருந்தார். ராஜீவ் காந்தியின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த வார்த்தைகள் அனைத்தும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. அன்றும், இன்றும் இந்திய மத்திய அரசை இயக்கும் நாயகர்களாக புதுடில்லியின் அதிகாரிகள் இருக்கிறார்கள். ராஜீவின் கடிதத்தில் இலங்கை அரசுக்கு கொடுக்கப்பட்டிருந்த வாக்குறுதிகளை இன்றும் இந்திய அரசு நிறைவேற்றி வருகிறது.

ராஜீவின் கடிதம், இந்திய அமைதிப்படை…

...அடுத்த பகுதிகளில்…

உங்கள் கருத்து என்ன?

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com