Thursday, May 24, 2007

எங்களுக்கு உரிமை இருக்கா?

சில நாட்களுக்கு முன்னர் பிபிசி தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை பார்க்க முடிந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொத்தடிமையாக வேலை செய்துகொண்டிருந்த சிறுவன் ஒருவனை வெளிநாட்டு ஊடகவியலாளர் காப்பாற்றி மாவட்ட ஆட்சித்தலைவர் முன் நிறுத்தினார். சம்பந்தப்பட்ட பகுதியின் வட்டாட்சியாளர் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாவட்ட ஆட்சித்தலைவர் தலையீட்டிற்கு பின்னரும் அந்த சிறுவனை காப்பாற்றுவதை விட அவரை பணியில் ஈடுபடுத்தியவரை காப்பாற்றுவதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டியதை காண முடிந்தது.

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டங்களுக்காக ILO மட்டுமே வழங்கும் பெருந்தொகை இந்தியாவிற்கு தான் வருகிறது. இந்த பணம் எதற்காக செலவிடப்படுகிறது? எத்தனை குழந்தைகள் இந்த திட்டங்களால் எப்படியான பயனை பெற்றார்கள் என விளக்கமாக மக்களுக்கு தெரிவிக்க அரசிற்கு கடமையுண்டு. குழந்தை தொழிலாளர், கொத்தடிமை ஒழிப்பு திட்டங்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் அதிகாரிகள் வர்க்கத்தினருக்கு கடுமையான தண்டனை அவசியம்.

உலகின் மூலை முடுக்குகளில், உணவு விடுதிகளில், வைரம் தீட்டுதலில், சாயப்பட்டறைகளில், கல் குவாரிகளில், சுரங்கங்களில், தொழிற்சாலைகளில், விவசாயத்தில், செங்கல் சூளைகளில்...உழைக்கும் உலகை உருவாக்கும் பிஞ்சு மலர்களின் உரிமைக்காக...


3 பின்னூட்டங்கள்:

மாசிலா said...

உங்களது பெரிய மனதை நலிந்தவர் பால் நீர் காட்டும் அக்கறையை பாராட்டுகிறேன் திரு அவர்களே.

ஒவ்வொரு முறையும் இது போன்ற சமுதாய அக்கிரமங்களை விவரிக்கும் செய்திகளை கொண்டுவரும் பதிவுகளை படித்துவிட்டு வலிக்கு மருந்து சாப்பிடுவதுபோல் இதையும் சாப்பிட்டுவிட்டு அடுத்த கனமே அனைத்தையும் மறந்து கலை, திரை, இலக்கியம், ஆன்மீகம், அரசியல் போன்ற போதை தரும் வஸ்துக்களில் மூழ்கி லயித்து விடுகிறோம். நாளடைவில் இதை போன்ற விடயங்களை எழுதுபவரும் இதே நிலைக்கு தள்ளப் படுகிறார். இது போன்ற செயல்களை வலைஞர்களான நாமே ஒரு அமைப்பு உருவாக்கி நம் கண்டனங்களை தெரிவிக்கலாம். நலிந்தவர்களுக்கு இருக்கும் உரிமைகளை அவர்களுக்கு தெரியப் படுத்தவேண்டும். சில அயோக்கியர்கள் ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றிக் கொண்டே இருப்பர். இனி ஏமாறுபவர்கள் இல்லை என அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

மீதம்

உங்களது கருத்து கண்டு ...

பத்மா அர்விந்த் said...

திரு
குழந்தை தொழிலாளர்கள் உருவாக காரணமே வறுமைதான். அதைப்போக்காத வரையில், இதனை நிறுத்த முடியாது. குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று சொல்லும் போது அவர்களின் தேவைகளை பார்த்துக்கொள்ள, அந்த வருமானத்தின் இழப்பை ஈடுகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்டனைகளில் இருந்து தங்களை காத்துக்கொள்ள முதலாளிகளுக்கு தெரியும்

கலை said...

நேற்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம். உங்கள் பக்கத்தில் இருக்கும் இந்த படங்கள் மனதில் பாரத்தை ஏற்றுகின்றது.
எல்லா குழந்தைகளுக்கும், அவர்களுக்குரிய அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டுகின்றேன்.

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com