Sunday, February 25, 2007

சிறுநீரகம் வாங்கலையோ சிறுநீரகம்!

வீதியில் காய்கறி வண்டிக்காரர் "கீரை, தக்காளி, வெங்காயம், கத்தரிக்காய்:.."ன்னு கூவி விற்பதை பார்த்திருப்போம். பேருந்தில் பிரயாணம் செய்யும் வழியில் வெள்ளரிக்கா..பிஞ்சு வெள்ளரிக்கா...ன்னு விற்பதையும் பார்த்திருப்போம். ஒரு தொழிலை கடினமாக செய்து பிழைக்கும் வறுமையின் பிடியில் இருக்கும் இந்த மக்களை பார்க்கும் போது பலமுறை சலனமில்லாது கடந்து செல்வோம். சிலவேளை மனது இறுக்கமடையும் இது இயல்பு. உள்ளூரில் தான் இப்படி காய்கறி வியாபாரம். உலகச் சந்தையில் தாய்மையையும், உடல் உறுப்புகளையும் விற்க கூறு கட்டி அழைப்பு விடுக்க வளர்ந்திருக்கிறது இந்தியா.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வேலையை வெளியே கொடுத்தல் (outsourcing) என்னும் அடிப்படையில் பன்னாட்டு சேவைகளை வழங்கும் நாடாக இந்தியா உலக அரங்கில் கவனிக்கத்தக்க இடத்தை பிடித்து வருகிறது. 1990களில் மருத்துவ குறிப்புகளை கணனி கோப்பாக்கும் பணிகள் அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு மாறியது. படித்து வேலை தேடிய பலருக்கு இந்த வேலை தற்கால தீர்வாக அமைந்தது. இந்த வேலைகளை எடுத்து நடத்திய நிறுவனங்களும், தனிநபர்களும் பெரும் வளர்ச்சியடைந்தனர். தொடர்ந்து சேவை அழைப்பு மையங்கள் (கால் சென்டர்) என்று சொல்லப்படும் சேவை வழங்கும் பணிகள் இந்தியாவிற்கு இடம் மாற்றம் பெற்றது. அயல்நாடுகளில் சேவை அழைப்புகளை கவனித்து வந்த பல நிறுவனங்கள் இந்தியாவில் கிளைகளை நிறுவியது. இந்தியர்கள் பலர் புதிய சேவை அழைப்பு மையங்களை உருவாகினர். பல இலட்சம் இளைஞர்களுக்கு வேலையை உருவாக்கிய புதிய துறையாக சேவை அழைப்பு மையங்கள் உருவானது. அதைப் போல மருத்துவ சுற்றுலா பெருஞ்செல்வம் கொழிக்கும் துறையாக வளர்ந்து வருகிறது.

மருத்துவம் செய்துகொள்ள இந்தியாவிற்கு வெளிநாட்டினர் வருகை கடந்த பல வருடங்களாக அதிகரித்து வருகிறது. இந்தியாவின் தலைசிறந்த தனியார் மருத்துவ மையங்களில் ஒன்றான அப்பல்லோ மருத்துவமனைகளில் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 60,000 வெளிநாட்டினர் மருத்துவ சேவையை பெற்றுள்ளனர். இதய அறுவை, சிறுநீரக மாற்று அறுவை, எலும்பு முறிவு, எலும்பு மஜ்ஜை மாற்று, ஈரல் மாற்று அறுவை, மகப்பேறு சம்பந்தமான மருத்துவம், கான்சர் மருத்துவம் என நவீன மருத்துவ வசதிகளுடன் இந்திய மருத்துவமனைகள் அயல்நாட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன. தேர்ச்சி பெற்ற மருத்துவர்களை உருவாக்குவதில் சுமார் 247 மருத்துவக்கல்லூரிகள் இந்தியா முழுமையும் செயல்பட்டு வருகின்றன. பொதுமருத்துவம், குழந்தை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், இதயம், சிறுநீரகம், எலும்பு, ஈரல், பல், கண் என தனி சிறப்பு மருத்துவங்களில் திறமையான பல மருத்துவர்கள் உருவாகி வருகிறார்கள். இதற்கான சிறப்பு மருத்துவ மையங்கள் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இயங்குகின்றன. பல்லாயிரம் செவிலியர்களை உருவாக்கும் கல்விநிலையங்கள், ஆயிரக்கணக்கான மருந்து உற்பத்தி நிறுவனங்கள் என இந்தியாவின் மருத்துவ சந்தை பலமானது.உலகெங்கும் 180 நாடுகளுக்கு மருந்து விற்பனை செய்யும் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவிடம் இருக்கிறது.

அலோபதி மருத்துவம் தவிர ஆயூர்வேத சிகிச்சை, இயற்கை மருத்துவம், மூலிகை மருத்துவம் போன்றவையும் களைகட்டுகிறது. இந்த வகை மருத்துவத்தில் வெளிநாட்டினரை கேரளத்து ஆயூர்வேத மருத்துவம் வெகுவாக கவர்ந்து வருகிறது. அருமையான காலநிலை, மனதை கவரும் இயற்கையான இடங்கள், மருத்துவ குணமுடைய மூலிகைகள், திறமையான வைத்தியர்கள், பழமையான கலைநயம் என வெளிநாட்டினரை வியக்க வைக்கும் திறனுடன் இருப்பது இதற்கு அடிப்படை காரணம். உள்ளூர்வாசிகளும் இந்த இயற்கை மருத்துவ ஓய்வுகளுக்காக கேரளா செல்வதும், நட்சத்திர வசதி கொண்ட இயற்கை மருத்துவ ஓய்வில் புத்துணர்வு பெறுவதுமாக செய்திகள் வருகின்றன.

வெளிநாட்டு வாடிக்கையாளர்களை கவர இந்திய சுற்றுலா மையமும், தூதரகங்களும் விளம்பரங்கள், கூட்டங்கள் போன்றவற்றை அயல்நாடுகளில் செய்து வருகின்றன. இப்படி அனைத்து நடவடிக்கககளளயும் எடுத்து மேற்கு உலகின் மருத்துவ சுற்றுலா மையமாக விளங்கி டாலரும், பவுண்டும், யூரோவும் குவிக்க இந்திய மருத்துவத்துறை தன்னை மாற்றிக்கொள்ள ஆரம்பித்துள்ளது. நட்சத்திர வசதிகள் கொண்ட மருத்துவமனைகள், அதிநவீன தொழில்நுட்ப வசதிகள், திறமைமிக்க மருத்துவர்கள், இதமான காலநிலை, அழகான இடங்கள், விலைகுறைந்த மருத்துவம் மற்றும் இதர வசதிகள் என வெளிநாட்டினரை கவரும் அனைத்து விசயங்களும் அமைவது இதற்கான சிறப்பு காரணம். அப்பல்லோ போன்ற தனியார் மருத்துவ நிறுவனங்கள் நாட்டின் எந்த பகுதியிலும் 2 மணி நேரத்தில் ஆகாயம் வழி அவசர மருத்துவ உதவிகளை வழங்குமளவு உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து சேவைகளும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளை விட குறைந்த விலையில் பெற்றுவிட இயலும் என்பதால் குறைந்த மருத்துவ செலவு உலக வாடிக்கையாளர்களை கவர்ந்திருக்கிறது. அமெரிக்காவில் 30,00 முதல் 80,000 அமெரிக்க டாலர் வரை செலவிடும் இதய அறுவை சிகிச்சைக்கு வெறும் 6,500 அமெரிக்க டாலரில் இந்தியாவின் சிறந்த தனியார் மருத்துவமனைகளில் ஒன்றான அப்பல்லோவில் சிகிச்சையை முடித்துக்கொள்ளலாம். வெளிநாட்டு பணமதிப்பில் ஒப்பிடும் போது இந்தியாவில் மருத்துவம் செய்ய அயல்நாட்டினருக்கு மிக குறைந்த செலவே. இந்திய ரூபாயின் மதிப்பு அயல்நாட்டவருக்கு சாதகமாக இருப்பதால் உயர்ந்த மருத்துவ வசதிகளை குறைந்த செலவில் சொகுசான வசதிகளுடன் பெற்றுக்கொள்கிறார்கள். மருத்துவப் பணிகள் முடிந்ததும் இந்தியாவின் பன்முக கலைகளை, கலாச்சாரங்களை, கண்ணை கவரும் சுற்றுலா தலங்களை அனுபவித்து பார்க்க வாய்ப்பு அமைவது இன்னும் சிறப்பான காரணம்.

சுமார் 15 பில்லியன் இந்திய ரூபாய்கள் மதிப்பிலுள்ள இந்திய மருத்துவ சந்தை ஒவ்வொரு வருடமும் 30 சதவிகித வளர்ச்சியை காண்கிறது. வெளிநாட்டினரின் மருத்துவ சுற்றுலா வழியாக இந்தியாவிற்கு ஆண்டுக்கு 1200 - 1500 கோடி ரூபாய் வருமானம் வருகிறது. 2012ஆம் ஆண்டிற்குள் மருத்துவ சுற்றுலா வழியா வரும் வருமானம் 5,000-10,000 கோடி ரூபாயை எட்டுமென கணக்கிடப்பட்டுள்ளது. ஆண்டிற்கு ஒரு மில்லியன் அயல்நாட்டினர் மருத்துவ சுற்றுலாவிற்காக இந்தியா வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுடில்லி, சென்னை, ஹைதராபாத், மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் இவர்கள் தங்குவதற்கான வசதிகள் கொண்ட வீடுகள் அல்லது விடுதிகளில் தேவை அதிகரிக்குமென்பதால் இப்போத அதற்கான முதலீடுகளும் அதிகரிக்கின்றன.

உடல் உறுப்பு மாற்று அறுவை செய்து கொள்பவர்களுக்கு மலிவு விலையில் உடல் உறுப்புகளை பெற்றுத்தர நிழல் உலகமே இயங்குகிறது. போதிய வருமானம் இல்லாதவர்கள், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், இயற்கை பேரழிவுகளில் துன்பமடைந்தவர்கள், அநாதைகள் போன்றோர் ஆசைவார்த்தைகளால் உறுப்புகளை தானம் செய்ய வைக்கப்படுகிறார்கள். சிறுநீரகம் தானம் செய்யும் இவர்களுக்கு வெறும் பத்தாயிரம் ரூபாயை கொடுத்து பல இலட்சம் ரூபாய் சம்பாதிக்கிறது இந்த கும்பல். உறுப்பு தானம் செய்வதால் வரும் உடல் பிரச்சனைகளைப் பற்றி இவர்களுக்கு சரியான தகவல்கள் வழங்கப்படுவதில்லை. மருத்துவர்களுக்கும்/ மருத்துவமனை நிர்வாகத்திற்கும் உறுப்புகளை பெற்றுத்தரும் தரகர்களுக்கும் இடையிலான தொடர்புகள் பரம இரகசியமாகவே இருக்கிறது. அப்பாவிகளிடமிருந்து சிறுநீரகத்தை திருடி காவல்துறையினர், மருத்துவ துறையினர், அயல்நாட்டினர், தூதரக அதிகாரிகளுக்கு பொருத்திய குற்றத்தில் மும்பை மருத்துவமனை ஒன்று ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து உறுப்பு மாற்று சட்டம் 1994 இயற்றப்பட்டது. இருந்தும் குற்றங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
15 ஜனவரி 1995ல் டில்லி சுங்க அதிகாரிகள் சிறுநீரகம் தானம் செய்வதற்காக வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்ட பலரை பிடித்தது. விசாரணையில் நூற்றுக்கணக்கானவர்கள் சிறுநீரக விற்பனைக்காக அயல்நாடுகளுக்கு சுற்றுலா என்ற பெயரில் அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 23, ஜனவரி 1995ல் சென்னை வில்லிவாக்கம் தொழுநோயாளிகள் மறுவாழ்வு காலனியில் வசித்தவர்களது சிறுநீரகம் பண ஆசை காட்டப்பட்டு திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 29 ஜனவரி 1995ல் பெங்களூரில் காவல்த்துறை நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 1000 பேரிடம் 'வேலை வாங்கி தருவதாக' ஆசைகாட்டி, இரத்தம் எடுப்பதாக பொய் சொல்லி சிறுநீரகத்தை அவர்களுக்கு தெரிவிக்காமலே திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. நகரின் பிரபலமான மருத்துவமனையும், பிரபல மருத்துவர்களும் இவற்றை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த சிறுநீரகங்கள் மத்திய கிழக்கு நாடுகளிலும், மேற்கத்திய நாடுகளிலும் உள்ளவர்களுக்கு பொருத்தப்பட்டது. சமீபத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சிறுநீரகம் எடுக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. உறுப்பு மாற்று சட்டத்தை செயல்படுத்துவதில் மருத்துவமனைகள், மருத்துவர்க்ள் ஒத்துழைப்பு இன்னும் வளரவில்லை என்பது இதன் வழி தெரிகிறது. மக்களுக்கு உறுப்பு திருட்டு பற்றிய விழிப்புணர்வும், குற்றம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் அவசியம்.

உலக அரங்கில் மருத்துவ சுற்றுலா வர்த்தகத்தை கவர்ந்தாலும் இந்திய ஏழைகளுக்கு மருத்துவ வசதி இன்னும் எட்டாமலே இருக்கிறது. 2000 இந்தியர்களுக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில் இந்தியா இருக்கும் போது சுமார் 60,000 இந்திய மருத்துவர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பணி செய்கின்றனர். உலக அளவில் அதிக எண்ணிக்கையில் மருத்துவர்களை பிற நாடுகளுக்கு இந்தியா வழங்குகிறது. இந்தியாவின் மருத்துவர்களில் 10 சதவிகிதம் பேர் பல நாடுகளுக்கு குடிபெயர்ந்து செல்கின்றனர் என்பது வேதனையான உண்மை. "இந்திய அரசின் சுகாதாரத்துறை 1,45,000 துணை மையங்களையும், 23,000 பொது சுகாதார மையங்களையும், 3,222 சமூக சுகாதார மையங்களை கொண்டு இயங்குகிறது. நாட்டின் சுகாதார தேவையில் இது வெறும் 20 சதவிகிதம் மட்டுமே. நாட்டின் சுகாதார தேவையில் 80 சதவிகிதம் தனியாரால் இயக்கப்படுகிறது. போதுமான வசதியில்லாத ஏழைகளுக்கு இந்த மருத்துவ வசதிகள் எட்டாமலே இருக்கிறது. இதனால் தவிர்க்கப்பட வேண்டிய மரணங்கள், கடன் தொல்லை, ஆபத்தான நோய்கள் ஏழைகளையே அதிகம் நெருங்குகிறது. தொடரும் வறுமையும், எட்டாத மருத்துவமும் கிராமப்புற ஏழைகளை பெரிதும் பாதிக்கிறது." என சில ஆண்டுகளுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்தார் இந்திய சுகாதாரத்துறை அமைச்சர்.

உலக நாடுகளின் சுகாதார தேவைக்கு மருந்து, மருத்துவர்கள், செவிலியர்கள், வல்லுநர்களை உருவாக்கும் இந்தியா சொந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவம் கிடைக்க வளர்வது எப்போது? அன்று தான் இந்திய மருத்துவ தூறையின் வளர்ச்சியை ஒரு ஏழை இந்தியனால் பெருமிதமாக பார்க்க முடியும்.


-o0O0o-

மருந்துகளை மனிதர்கள் மீது சோதனை செய்து ஆய்வு செய்வதில் மருந்து நிறுவனங்கள் இந்தியாவை பெரிதும் விரும்புகின்றன. இது பற்றி இன்னும் விரிவாக அடுத்த பதிவில்...

13 பின்னூட்டங்கள்:

குழலி / Kuzhali said...

//மருந்துகளை மனிதர்கள் மீது சோதனை செய்து ஆய்வு செய்வதில் மருந்து நிறுவனங்கள் இந்தியாவை பெரிதும் விரும்புகின்றன. இது பற்றி இன்னும் விரிவாக அடுத்த பதிவில்...
//
என்னங்க 'ஈ' படத்தில் வருவது மாதிரி சொல்கின்றீர்?

மங்கை said...

அருமையான அலசல் திரு

ஆர்வத்தை தூண்டோ தூண்டென்று தூண்டுகிகிறது..

//போதிய வருமானம் இல்லாதவர்கள், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், இயற்கை பேரழிவுகளில் துன்பமடைந்தவர்கள், அநாதைகள் போன்றோர் ஆசைவார்த்தைகளால் உறுப்புகளை தானம் செய்ய வைக்கப்படுகிறார்கள்//

அன்மையில் மதுரையிலும் இது போல சிறுநீரக வியாபாரம் கண்டுபிடுக்கப்பட்டுள்ளது..

ரொம்ப நல்லா இருக்கு

பத்மா அர்விந்த் said...

சிறுநீரக விற்பனை முன்னே கலைகட்டி இருந்தது. இன்னமும் தொடர்வது வேதனையான விஷயம்.
//மருந்துகளை மனிதர்கள் மீது சோதனை செய்து ஆய்வு செய்வதில் மருந்து நிறுவனங்கள் இந்தியாவை பெரிதும் விரும்புகின்றன// இதைப்பற்றி முன் எப்போதோ எழுதி இருந்தேன். ரோடாவைரஸ் தடுப்பூசியை ஹரியானா மாநில குழந்தைகள் மிது பரிசோதித்தது குறித்து. இதற்கு நிறுவனங்களை குறை கூறிபலன் இல்லை. அனுமதிக்கும் அரசியல்வாதிகள் மந்திரிகள் போன்றோரைத்தான்முதலில் மாற்ற வேண்டும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

திரு!
இந்த சிறு நீரகத் திருட்டுப்பற்றிய செய்தி இங்கே தொலைக்காட்சியில் பார்த்தேன். இதில் இத்தாலிய வைத்தியருக்கு வட இந்திய வைத்தியர்; உதவுகிறார். உள்ளூர் முகவர்கள் சகல மாநிலங்களிலும் இருந்து லட்டக்கணக்கில் விலைபேசிப் பின் ஆயிரங்களுடன் கலைத்து விட்டு;அவர்கள் அந்த ஆயிரங்களைக் கூட
பின் மருத்துவத்துக்கே செலவு செய்து அல்லல் உறுவதாகக் காட்டினார்கள்.
அறியானையை வெகுவாகப் பயன் படுத்துகிறார்கள்
நினைக்க வேதனையாகத்தான் உள்ளது.

தருமி said...

சிறு நீரக வியாபாரம் லோக்கல் விவகாரம். அடுத்து நீங்கள் எழுதப் புகுவதோ multinational விவகாரம். கட்டாயம் இன்னும் பேரதிர்ச்சியாக இருக்குமென்று நினைக்கின்றேன். எதிர்பார்த்து இருக்கிறேன்.

ramachandranusha(உஷா) said...

திரு, இந்த செய்தி நான்கு நாட்களுக்கு முன்பு கல்ப் நீயூஸ் செய்தித்தாளில் வந்தது. அதிகம் இணையம் பக்கம் வர முடியாததால் இச்செய்தி தமிழ் இணையத்திலும், செய்திதாள்களில் எந்தளவு விவாதிக்கப்பட்டது என்பது எனக்கு தெரிய வரவில்லை.எந்த
மருத்துவமனை என்று தெளிவாய் சொல்லபப்ட்டுள்ளது. ஆனால் சட்டப்படிடி நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

-----------------------------------

Selling organs for survival
By Vinita Bharadwaj, Special to Weekend Review



It's January 26, a national holiday in India. The day is exactly 25 months after the Asian tsunami disaster.

There are horns, sirens and other sounds of great fanfare which can be heard in the Eranavur suburb in Chennai, temporarily home to fishermen and their families who were ravaged by the 2004 tsunami. (Chennai is the capital of the southern Indian state of Tamil Nadu.)

The makeshift arrangements house 1,740 families and each household has been allotted a room that serves as a living room, bedroom and kitchen — regardless of the number of family members. They share common toilets and bathing areas.

This is how they have been living ever since the tsunami uprooted their lives. They will continue to do so until the state government shifts them to permanent housing — sometime in the future.

Homes, they say, that won't be in Tsunami Nagar, which is how its citizens refer to their present quarters. Homes that will be closer to the shoreline and they hope will earn them a better livelihood.

Now many fishermen's wives in Tsunami Nagar are selling their kidneys out of desperation to bring home the money that their husbands are unable to earn.

Maria Selvam, president of the local fishermen's association, brought the situation to the attention of a People's Tribunal headed by UN Special Representatives.

"I spoke out on January 12. And on January 17 the people here [Tsunami Nagar] beat me up. They weren't happy that I went public with the story. They think it has brought dishonour on us. So now I'm looked upon as a traitor," he says.

Fishing trawlers off access

Selvam decided to speak out when he learnt that more than 80 women had sold their kidneys.

Though he blames it on the inadequacy of the Indian government's rehabilitation efforts to an extent, he says it is primarily a problem created by the menfolk who are refusing to work.

It doesn't help that Tsunami Nagar is eight kilometres from the shore. There is a beach nearby but it isn't possible to dock the large fishing boats and trawlers the fishermen have traditionally used to go fishing on the high seas.

Selvam, who doesn't fish anymore — out of fear — previously went to sea on a motorboat aboard which he remained for a week. "We can catch more that way so we prefer that method of fishing," he says.

Although smaller boats can berth at the shallow beach, Selvam says that a number of his comrades find it difficult to overcome their justifiable apprehensions and anxieties to go fishing on the small vessels.

To join a group of fishermen on a large trawler or motorboat, they have to commute to the docking area about ten kilometres away. Transport costs them Rs40 (approximately Dh3) per trip but the returns do not justify their going to such great hardship.

What of other jobs then, I ask. Selvam, for instance, now has a firewood stall in Tsunami Nagar, although his recent declarations to the media could force him to look at other opportunities.

"There is construction. And there is a factory across the road. But there is not enough money in it. And whatever little they make is spent on alcohol," he says.

Rampant alcoholism

A group of women in Tsunami Nagar point to Thilakavathy, a 36-year-old woman, who sold a kidney.

"Her husband gets drunk and beats her up at night," they say.

Thilakavathy admits that her husband doesn't fish anymore. Nor does he have any other job. She has three daughters. In other words, she would have to raise three dowries to marry them off.

The family survives on the money she makes as a construction worker. Her eldest daughter, who is 19, works as a maid.

Although she wasn't in immediate need of any substantial capital, she says, she decided to sell her kidney as the family didn't have enough to eat.

Since her operation four months ago, Thilakavathy has been unable to work and is now in greater financial trouble as she is yet to receive the payment for her kidney.

Unlike the guarded Thilakavathy, who refused to allow any photographs of her, 36-year-old Rani volunteers more information.

Rani's husband no longer goes fishing either but she hastens to brush off — and vehemently — any suggestions of a drinking problem he may have.

Driven to desperation

Since they moved to Tsunami Nagar, Rani has made some money from a tea-stall she has set up in front of their makeshift quarters.

"I have a 22-year-old daughter and for her wedding I needed to come up with some money. I knew we could get big amounts by selling the kidney," she says.

She went alone to Chennai's Devaki Hospital, where she met a tout at a tea-shop outside the hospital.

"He said I would be paid Rs150,000 (Dh12,480) — Rs40,000 (Dh3,330) soon after the operation and then a monthly payment of Rs3,000 (Dh249.54) towards the balance," she says.

Like all the other women of her background selling their kidneys, Rani too was told little about the procedure or about post-surgical care. Least of all the potential risks involved. Instead, she was merely asked to sign a consent form.

After the surgery Rani stayed in the general ward of the hospital for a week. She got her first payment of Rs40,000 (Dh3,330) and she returned to Tsunami Nagar believing that the remaining payments would be duly sent to her every month.

A few months after there were no signs of the remainder, Rani tried the broker's contact number. Needless to say, there was no response. When she tried to visit the address, she learnt it was non-existent. And when she went back to Devaki Hospital, there was no sign of the man.

Rani starts sobbing at this point.

"I haven't been able to work since that surgery. I can't lift anything. I can barely stand up for half an hour a day. I don't know what they've taken from me. My husband helps me around the house and looks after me."

Endemic phenomenon

Though there is a picture of former chief minister J. Jayalalithaa — credited with spearheading Tamil Nadu's tsunami rehabilitation efforts — on her door, Rani doesn't think that the change in government has made a difference.

"We stopped receiving aid under Jayalalithaa's rule. We still haven't got our new house. We can't sell fish anymore. The tsunami didn't take our lives, but it took our livelihoods," she says.

The Indian media has reported extensively on the story of tsunami victims resorting to selling kidneys. And while there is a story, Jaya Menon, a reporter with The Indian Express, says the tsunami isn't the locus of the kidney scam.

Menon, who broke the story, says it's a problem that's endemic to poverty.

"Chennai is not new to this. It has been going on for 20 years. In fact, when I was with The Statesman, we uncovered the same phenomenon in the slums. There's a place called Vilivakkam that is so notorious for it that many people know it as Kidneyvakkam," she says.

This poverty-related phenomenon is one that many observers say will continue to exist as long as there is a demand.

"The government shouldn't ban the sale of organs but regulate it," Menon says.

Organ sale is a complicated issue despite the presence of a Transplant Ethics Committee which comprises a panel of medical experts who are supposed to screen every donor to ensure that the donor is a compassionate donor and not someone doing it for commercial gain.

A well-known surgeon at a famous Chennai hospital, who has performed organ donation surgeries, admitted under condition of anonymity that he could not confidently guarantee that this mandatory screening has been taking place.

"I wish I could say yes, 100 per cent. All donors are thoroughly checked and the process is straightforward. But I cannot say that," he says.

Systemic flaws

According to the 1994 legislation, the state-appointed committee must approve every transplant. The committee is expected to interview all potential donors before approving them.

The Chennai surgeon estimates that the committee interviews about 20-25 donors a week and approves 85 per cent of the applicants.

However, he says brokers produce false papers so that the transaction subsequently takes place on legal grounds.

Though members of the Transplant Ethics Committee have publicly admitted to flaws in the system, they deny that they are bribed and blame the forgery on the brokers.

The surgeon is far from convinced. "Ask the women in Tsunami Nagar how they were interviewed by the Ethics Committee," he says.

Sure enough, Rani recalls an extremely brief encounter with the committee.

"I was part of a group of women who were all arranged by the agent. One by one the committee called us forward. They asked me if I was willing to donate my kidney. I said yes and then they asked me to sign a paper. That's all," she says.

However, ever since the story of the mass kidney sale hit the headlines, the state government has been on alert.

Various departments have opened investigations and have promised action. However, at the time of writing, few officials were willing to respond to any questions.

Meanwhile, Maria Selvam returns from a visit to the new permanent housing project site. He assures me that it exists. When they'll move, he doesn't know.

"I don't know anything. I don't know if the men will resume fishing. Maybe some will. But anyone with children won't go back to sea," he says.

------------------------------------

thiru said...

//குழலி / Kuzhali said...
//மருந்துகளை மனிதர்கள் மீது சோதனை செய்து ஆய்வு செய்வதில் மருந்து நிறுவனங்கள் இந்தியாவை பெரிதும் விரும்புகின்றன. இது பற்றி இன்னும் விரிவாக அடுத்த பதிவில்...
//
என்னங்க 'ஈ' படத்தில் வருவது மாதிரி சொல்கின்றீர்?//

குழலி,

கிளினிக்கல் டெஸ்டிங்க் இந்தியாவில் ஏற்படுத்த இருக்கிற விளைவுகளை அடுத்த பதிவில் விரிவாக சொல்லுகிறேன்.

thiru said...

//மங்கை said...
அருமையான அலசல் திரு

ஆர்வத்தை தூண்டோ தூண்டென்று தூண்டுகிகிறது..

//போதிய வருமானம் இல்லாதவர்கள், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், இயற்கை பேரழிவுகளில் துன்பமடைந்தவர்கள், அநாதைகள் போன்றோர் ஆசைவார்த்தைகளால் உறுப்புகளை தானம் செய்ய வைக்கப்படுகிறார்கள்//

அன்மையில் மதுரையிலும் இது போல சிறுநீரக வியாபாரம் கண்டுபிடுக்கப்பட்டுள்ளது..

ரொம்ப நல்லா இருக்கு //

மங்கை,

நாடெங்கும் இது நடந்துகொண்டே தான் இருக்கிறது. வெளிச்சத்திற்கு வரும் தகவல்கள் மிக குறைவு அவ்வளவே. ஆர்வத்திற்கு நன்றி. தொடர்ந்து வாசியுங்கள்.

thiru said...

//பத்மா அர்விந்த் said...
சிறுநீரக விற்பனை முன்னே கலைகட்டி இருந்தது. இன்னமும் தொடர்வது வேதனையான விஷயம்.
//மருந்துகளை மனிதர்கள் மீது சோதனை செய்து ஆய்வு செய்வதில் மருந்து நிறுவனங்கள் இந்தியாவை பெரிதும் விரும்புகின்றன// இதைப்பற்றி முன் எப்போதோ எழுதி இருந்தேன். ரோடாவைரஸ் தடுப்பூசியை ஹரியானா மாநில குழந்தைகள் மிது பரிசோதித்தது குறித்து. இதற்கு நிறுவனங்களை குறை கூறிபலன் இல்லை. அனுமதிக்கும் அரசியல்வாதிகள் மந்திரிகள் போன்றோரைத்தான்முதலில் மாற்ற வேண்டும்//

பத்மா,

முடிந்தால் நீங்கள் எழுதிய சுட்டியை இணையுங்களேன்.

ஆம், பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் மக்களின் பாதுகாப்பை விலைக்கு விற்கிற அரசியல்வாதிகள் தான் முதல் குற்றவாளிகள். உடல் உறுப்புகள் வியாபாரத்தில் அரசியல்வாதிகள், மருத்துவமனைகள்/மருத்துவர்கள், நிழல் உலக தரகர்களின் கூட்டு என்று தான் சொல்ல வேண்டும்.

thiru said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
திரு!
இந்த சிறு நீரகத் திருட்டுப்பற்றிய செய்தி இங்கே தொலைக்காட்சியில் பார்த்தேன். இதில் இத்தாலிய வைத்தியருக்கு வட இந்திய வைத்தியர்; உதவுகிறார். உள்ளூர் முகவர்கள் சகல மாநிலங்களிலும் இருந்து லட்டக்கணக்கில் விலைபேசிப் பின் ஆயிரங்களுடன் கலைத்து விட்டு;அவர்கள் அந்த ஆயிரங்களைக் கூட
பின் மருத்துவத்துக்கே செலவு செய்து அல்லல் உறுவதாகக் காட்டினார்கள்.
அறியானையை வெகுவாகப் பயன் படுத்துகிறார்கள்
நினைக்க வேதனையாகத்தான் உள்ளது.//

அதிர்ச்சியளிக்கும் செய்தி. ஆனால் இது தான் உண்மை.

thiru said...

//தருமி said...
சிறு நீரக வியாபாரம் லோக்கல் விவகாரம். அடுத்து நீங்கள் எழுதப் புகுவதோ multinational விவகாரம். கட்டாயம் இன்னும் பேரதிர்ச்சியாக இருக்குமென்று நினைக்கின்றேன். எதிர்பார்த்து இருக்கிறேன்.//

தருமி அய்யா,

ம்ம்... இந்த பதிவிற்காக ஆய்வு செய்யும் போது நெஞ்சம் கனக்குமளவு செய்திகள் வருகின்றன.

கலை said...

தற்போதைய காலகட்டத்தில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் அவலங்களை எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.

உங்களது ஆய்வில், அடுத்த பதிவில் என்ன வரப்போகின்றதோ என்று கனக்கும் மனதுடன் எதிர் பார்த்திருக்கிறேன்.

சிவபாலன் said...

திரு

மிக நன்றாக அலசியுள்ளீர்கள்.

தேவையான பதிவு!!

பதிவுக்கு நன்றி

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com