Sunday, February 04, 2007

ஆடு நனைகிறது ஓநாய் அழுகிறது!

ஆடு நனைகிறது என ஓநாய் அழுது வடிப்பதாக கிராமங்களில் பழமொழி ஒன்று உண்டு. இன்று ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைமுறை, தெய்வங்கள் அனைத்தையும் விழுங்கிவிட்டு பார்ப்பனீயம் ஓநாயாக அழுது புலம்புகிறது. ஓநாய்களிடமிருந்து ஆடுகளுக்கு விடுதலை தானாக வருவதில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையும் அது போல தானாக கிடைப்பதில்லை. நீண்ட நெடிய போராட்டங்களின் விளைவாகவே ஒடுக்கப்பட்ட மக்கள் விடியலைப் பெற முடியும்.

பாதிக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான வழிமுறைகள் அந்த மக்களிடமிருந்தே உருவாகின்றன. விடுதலைக்கான சமூக இயக்கங்களின் துவக்கம் மக்களின் பிரச்சனைகளிலிருந்தே பிறந்திருக்கிறது. தென்தமிழகத்தில் பார்ப்பனீய அடக்குமுறையிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்களை காப்பாற்ற அய்யாவழி தோன்றியது. பிரச்சனையின் உச்சநிலையில் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்தே அய்யாவழி பிறந்தது. எந்த பார்ப்பனீயத்தை எதிர்த்து அய்யாவழி பிறந்ததோ அதே பார்ப்பனீயம் இன்று அய்யாவழியை விழுங்கி ஏப்பம் விட துடிக்கிறது. அய்யாவழி மதம் தோன்றிய காரணத்தை புரிந்துகொள்ள அன்றைய திருவிதாங்கூர் பற்றி அறிவது அவசியம்.

திருவிதாங்கூர் சங்ககாலத்தில் ஐந்திணைகளாக பிரிக்கப்பட்டு சமஉரிமை படைத்த திராவிடர்களின் பூமியாக இருந்துள்ளது. கி.மு மூன்றாம் நூற்றாண்டு முதல் திருவிதாங்கூரில் துவங்கிய ஆரிய பண்பாட்டு படையெடுப்பு கி.பி 8ம் நூற்றாண்டில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியது (தமிழக வரலாறும் பண்பாடும்: டாக்டர் A.சாமிநாதன்). இந்த காலகட்டத்தில் சாதி அமைப்பை உருவாக்க துவங்கியது. "சாதி அமைப்பில்லாத சமத்துவ சமுதாயத்தில் குடியேறிய ஆரியர்கள் சதுர்வர்ண அடிப்படையில் ஆரிய சித்தாந்த சாதி அமைப்பை உருவாகினர்" (மேற்கோள்: வரலாற்றாசிரியர் திரு. ஸ்ரீதரமேனன்). 19ம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் பார்ப்பனீய கொடுங்கோன்மையின் உச்சநிலையில் இருந்தது. பார்ப்பனீயவாதிகளால் விதிக்கப்பட்ட இந்துமத விதிகள் ஒடுக்கப்பட்ட மக்களை தீண்டாமை தீயில் வேக வைத்தது.

கன்னியாகுமரியில் அடக்குமுறையாளர்கள் பெரும்பாலும் நாயர் சாதியினர். திருவிதாங்கூர் அரசகுடும்பத்திற்கு விசுவாசமாக இருந்ததற்காக, போரில் அபரிதமாக செயலாற்றியதற்காக நாயர்களுக்கு பிள்ளை, பணிக்கர், நம்பியார், மேனன், கர்தா, கைமால்... என பட்டங்களை மன்னன் வழங்கியிருந்தான். இந்த பட்டங்களை நாயர் குடும்பங்கள் நிரந்தரமாக பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. காலப்போக்கில் இந்த பட்டங்கள் துணைசாதிகளாக அடையாளம் காணப்பட்டன. நம்பூதிரிகளின் நிழல் அதிகார மையங்களாக நாயர் குடும்பங்கள் விழங்கியது. திருவிதாங்கூரில் சாதி அடுக்கில் நம்பூதிரிகளுக்கு அடுத்த இடம் நாயர்களுக்கு இருந்தது. நம்பூதிரிகளின் ஆதரவு நாயர்களுக்கு தடையில்லாமல் கிடைக்க முக்கிய காரணம் அவர்களுக்கிடயிலான morganatic மணஉறவுகள். சிலநேரங்களில் பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக, நிலவுடமையாளர்களாக இருந்த நம்பூதிரிகளின் செல்வத்தை பெற இந்த மண உறவுகள் ஏற்படுத்தப்பட்டன. நாயர் பெண்ணின் வீட்டிற்கு நம்பூதிரி "வரலாம்"; அந்த வேளை அவளது கணவனை விட நம்பூதிரிக்கே முதலிடம் என்ற வழக்கம் இருந்தது. இவ்வகை உறவுகளினால் நம்பூதிரிகளின் நிழலில் நாயர்கள் பதவி, அதிகாரம், சொத்து, படைபலம் என அனைத்தையும் அனுபவித்தனர். மன்னனின் படைகளில் முக்கிய பதவிகளில் நாயர்கள் இடம்பெற்றனர். விளைநிலங்களான வயல், தென்னந்தோப்புகள் நாயர்களிடமிருந்தது. வழிபாட்டு முறைகளிலும் நாயர்கள் சூரியவணக்கம் முதல் பெரும்பாலும் நம்பூதிரிகளின் வழிபாட்டுமுறைகளை தழுவியே இருந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் நாயர்களை நேரில் காணும் போதும், பேசும் போதும் அழைக்க "ஏமானே (எஜமானே)" என குறிப்பிடுவது வழக்கமாக இருக்கிறது. 'எஜமான்' நிலையில் இருந்த இவர்களை அப்படி அழைத்த சொல் யாமான், ஏமான் என்று மருவி சொல் வழக்காக இருக்கிறது. அதே நாயர் நேரில் கண்ணில் படாத வேளை சூத்திரன் என திட்டுவதும் உண்டு. அடக்குமுறையை அனுபவித்த வலியின் வெளிப்பாடு சூத்திரன் என நாயரை ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்குள் சொல்ல வைத்தது. பண்ணையார்களாக இருந்த நம்பூதிரிகளும், நாயர்களும் ஒடுக்கப்பட்ட மக்களை அடிமைகளாக வைத்திருந்தனர்.

கொல்லம் திவான் எழுதிய மடலில் திருவிதாங்கூரில் 1,64,864 பேர் அடிமைகளாக இருந்துள்ளனர் என்பதை குறிப்பிடுகிறார். அடிமைகளாக இருந்த மக்கள் ஆங்கிலேய காலனியாத்திக்க பிரதிநிதிக்கு எழுதிய கடிதத்தில் "பரம்பரை பரம்பரையாக நாங்கள் விவசாய கூலிகள், வேலையும் சமூக அடக்குமுறையும் சேர்ந்து எங்களை விவசாய கூலி அடிமையாக பண்ணையார்களிடம் வைத்திருக்கிறது. நாங்கள மன, வாழ்வு அடிப்படையில் சுதந்திர மனிதர்களாக பண்ணையார்கள் எதிராக உள்ளனர். ஆதிக்க சாதியினர் அனுபவித்து வருகிற உரிமைகள் எங்களுக்கு மறுக்கப்படுகிறது. நில உரிமையாளர்களின் பிடியில் சிக்குண்டு மழையிலும், வெயிலிலும் மிருகமாக உழைத்து எஜமானர்கள் சொத்தை பெருக்க நாங்கள் அரை வயிற்றில், அழுக்கு சாக்கில் அவதிப்பட வைக்கப்பட்டுள்ளோம்" என எழுதினர். அடிமைகளை வாங்குவதும், விற்பதும் ஆதிக்கசாதி நில உடமையாளர்களுக்கு உரிமையாக இருந்தது. இரணியல், தொடுவெட்டி, படந்தாலுமூடு போன்ற பகுதிகளில் அடிமைகளை விற்க சந்தைகள் இருந்துள்ளன. அடிமைகளை சக்கையாக பிளிந்து வேலை வாங்கிய பின்னர் வதைப்பதும், கொலைசெய்வதும், மீண்டும் விற்பது என கொடுங்கோன்மையின் உச்சகட்டம் நிலவியது. திருவிதாங்கூர் பார்ப்பனீய அரண்மனை, கோட்டைகளின் அழகிலும், கோயில்களின் சுவர்களிலும் இந்த அடிமைகளின் இரத்தமும் சதையும் கலந்த வரலாறு செல்வ செழிப்பாக கலந்திருக்கிறது.

பார்ப்பனீயம் உச்சநிலையில் ஈடுபட்ட அரசுகளில் நம்பூதிரிகளும், நாயர்களும் இணைந்து ஆதிக்கம் செலுத்திய திருவிதாங்கூர் மன்னராட்சி குறிப்பிடத்தக்கது. நம்பூதிரிகளும், நாயர்களும் சேர்ந்து கோவில்கள், வீதிகள் எங்கும் கட்டுப்பாடுகள் அமைத்து தங்களுக்கு சாதகமான அமைப்பை உருவாகி வைத்திருந்தனர். அதிகார மையங்களில் தங்களுக்கு சாதகமான சட்டங்களை உருவாக்கி வைத்திருந்தனர். ஈழவ சாதியில் பிறந்தவர்கள் நம்பூதிரிகளிடமிருந்து 32 அடி தூரம் விட்டும், நாயர்களிடமிருந்து 16 அடி தூரம் தள்ளியும் நடக்கவேண்டும் என்ற சட்டங்கள் நடைமுறையில் இருந்தது. கண்ணால் பார்த்தாலே தீட்டு என சில சாதிகளை ஒதுக்கி வைத்திருந்தனர். ஒடுக்கப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேல் உடையணிய தடையும், அபராதமும் விதித்திருந்தனர். நாயர் வீடுகளின் அருகில் பிற சாதியினர் செல்லக்கூடாது. நாயர்கள் குளிக்கும் பொது இடங்களில் பிற சாதியினர் குளிக்கக்கூடாது. நாயர்கள் போல மேலாடை அணியக்கூடாது. கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாது. கோவிலில் நுழையக்கூடாது. இருபதாம் நூற்றாண்டு வரையிலும் இப்படியான கொடுமைகள் தொடர்ந்தன. கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த கொடுமைகளை அதிகம் அனுபவித்தவர்கள் பள்ளர், பறையர், சாணார், முக்குவர் சாதி மக்கள்.

இந்த கொடுமைகளை எதிர்த்து ஒவ்வொரு காலகட்டத்திலும் பல இடங்களில் கிளர்ச்சிகள் எழுந்து கலவரங்களாக வெடித்தது. அந்த போராட்டங்களில் மூழ்கி எழுந்த முத்தாக சமூகப்புரட்சியாளர்கள் பலர் உருவாகினர். திருவிதாங்கூரில் உருவான வீரம் செறிந்த மாமனிதர்களில் அய்யங்காளி, நாராயணகுரு, அய்யா வைகுண்டர் (முத்துக்குட்டி சாமிகள்) என பலர். அன்றைய வர்ணாஸ்ரம சாக்கடையான திருவிதாங்கூரை சீர்படுத்திய இந்த மாமணிகளின் வரலாறு இன்றைய தலைமுறை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தெரியவில்லை. பள்ளிப்பாடங்களிலும், வரலாற்று புத்தகங்களிலும் இவற்றை அறியாமல் வளர்ந்துவிட்டோம்.

மன்னர் ஆட்சியில் நம்பூதிரிகளும், நாயர்களும்அனுபவித்து வந்த பதவி சுகங்கள், அதிகாரம் அனைத்தும் காலனியாதிக்கத்தில் இடம் மாற துவங்கியது. கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு மாறிய மக்கள் தங்களது உரிமையை அனுபவிக்க ஆரம்பித்தனர். மேலாதிக்கத்தின் பிடி மெல்ல நழுவ துவங்கியது. பார்ப்பனீய மதத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் மதம் மாறினால் கிடைக்குமென நம்பி அதிக எண்ணிக்கையில் மக்கள் மதம் மாற துவங்கினர். வாழ்வுரிமையையும், கலாச்சாரத்தையும், வழிபாட்டு உரிமையையும் மீட்டெடுக்க தெற்கு திருவாங்கூரில் சமூகநீதி போராட்டங்கள் மதத்தை மையமாக வைத்து உருவானது.

ஈழவ மக்களுக்கு கோவிலில் வழிபட, சாலைகளில் நடமாட தீட்டு என தள்ளி வைத்தனர் ஆதிக்க சாதியினர். வைணவ இந்துகோயில்களில் ஒடுக்கப்பட்ட மக்களை தீட்டாக வைத்து வழிபாட்டு உரிமையை மறுத்ததை எதிர்த்த நாராயணகுரு ஈழவ மக்களுக்காக தனியாக கோயில்களை உருவாக்கினார். நம்பூதிரிகளும், நாயர்களும் அதை எதிர்த்தனர். எதிர்த்த நம்பூதிரி ஒருவனிடம் "இது நம்பூதிரி சிவனுக்கான கோயிலல்ல, இது ஈழவ சிவன் கோவில்" என்றாராம் நாராயணகுரு. எங்களை எங்கள் வழியில் வாழவிடு என்பதாக அமைந்த நாராயணகுருவின் பாதை அணுகுமுறை பார்ப்பனீயத்தை உலுக்கியது.

பார்ப்பனீய கொடுங்கோன்மையில் சாலையில் நடக்க கூட உரிமையில்லாதவர்களாக புலையர் சாதி மக்கள் நடத்தப்பட்டனர். கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பின்னரும் தங்களது பொருளாதாரமும், வாழ்க்கையும் முன்னேறாமல் இருந்த புலையர் சாதி மக்கள் சாலைகள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட பொது வசதிகளுக்காக இயக்கமாக போராட்ட துவங்கினர். 1893ல் புலையர் சாதியினர் வெங்கனூர் என்னும் இடத்தில் பள்ளிக்கூடம் ஒன்றை துவங்கினர். இந்த பள்ளிக்கூடம் ஆதிக்கசாதியினரால் தகர்க்கப்பட்டது. புலையர் சாதி மக்களிடமிருந்து பிறந்த ஒருவர் அதை எதிர்த்து கடுமையாக போராடினார். ஆதிக்க சாதியினர் நிலங்களில் விவசாய வேலைகள் செய்வதை புறக்கணிக்க அழைப்பு விடுத்தார் அந்த மனிதர். மாட்டு வண்டியில் பொது சாலையில் சென்று போராட்டம் துவங்கினார். 1898ல் அவர் தலைமையில் பொது சாலையில் புலையர்கள் நுழையும் போராட்டத்தை நடத்தினார். புலையர் சாதி மக்களுக்கும் ஆதிக்க சாதியினருக்கும் மோதல்கள் வெடித்தன. கன்னியாகுமரி, நெய்யாற்றின்கரை, வைக்கம் முதலான இடங்களில் வெடித்த போராட்டங்களை அரசு அடக்கியது. இந்த போராட்டத்தை முன்னின்று நடத்திய மாபெரும் மனிதர் தான் அய்யன்காளி. அய்யன்காளி, வலிக்கர சோதி முதலிய தலைவர்களின் போராட்டங்களின் பலனாக புலையர் சாதி மக்களுக்கு கல்வி உரிமைக்கான சட்டத்தை 1914ல் திருவிதாங்கூர் அரசு உருவாக்கியது. இந்த சட்ட உரிமையை ஆதிக்க சாதியினர் கடுமையாக எதிர்த்தனர். புல்லத்து என்ற இடத்தில் புலையர் சாதி குழந்தைகள் படித்த பள்ளிக்கூடத்தை நாயர்கள் தீவைத்து கொழுத்தினர். இந்த பிரச்சனையில் காலனியாதிக்க அரசு தலையிட்டது.

நாடு முழுவதும் கலனியாதிக்கத்தின் பிடி அழுத்தமாக இருந்த வேலையிலும் பார்ப்பனீய கொடுங்கோன்மை ஆதிக்க சாதிகளால் நடத்தப்பட்டே வந்தன. குறுநில மன்னர்கள் போல திருவிதாங்கூரின் பல பகுதிகளின் பல கிராமங்களை நம்பூதிரிகள், நாயர்கள் கூட்டணி ஆட்சி செய்து வந்த அதிகார மையங்களே இதற்கு அடிப்படை காரணம். இந்த அதிகார மையங்கள் மன்னனுடன் தொடர்பை வைத்திருந்தது. கோவிலை சுற்றி அமைந்த பல கிராமங்களை உள்ளடக்கி ஆளப்பட்ட இந்த பகுதிகள் சங்கேதம் என்று அழைக்கப்பட்டன. சட்டம் ஒழுங்கை கவனிக்க தனியாக படைகள் எதுவும் இல்லாமல் இருந்தாலும் இவை அதிகார மையங்களாக விளங்கியது (தகவல்: கொச்சி இராச்சியம், K.P.மேனன், 1911)

நாடார் பெண்கள் தங்கள் உடலின் மேல்பகுதியில் (இடுப்புக்கு மேலே) மார்பை மறைக்க இடுப்புக்கு மேல் துணி அணிய உரிமை மறுக்கப்பட்டது. மீறி ஜாக்கட் அணிந்த பெண்கள் கொடும் துயரத்துக்கு ஆளாயினர். நாடார் சாதி மக்களின் போராட்டங்களும், ஐரோப்பிய மிஷனரிகள் ஆங்கிலேய அரசாங்கத்திற்கு கொடுத்த அழுத்தத்தின் விளைவாகவும் 1829-ம் ஆண்டு திருவிதாங்கூர் அரசு நாடார் பெண்கள் குப்பாயம் எனப்படும் ஒருவித ரவிக்கையை மட்டும் அணியலாம் என்று அனுமதித்தது. ஆனால் அவர்கள் மேல்சாதி பெண்களைப் போல நல்ல உடை அணியக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நாயர்களின் எதிர்ப்பு காரணமாக அந்த உத்தரவை நடைமுறைபடுத்த முடியவில்லை. 1859ல் தெற்கு திருவிதாங்கூரில் (குமரிமாவட்டம்) இரணியல், கோட்டார், திட்டுவிளை, தொடுவெட்டி மற்றும் பல ஊர்களில் நாடார் சாதி மக்களை நாயர்கள் கடுமையாக தாக்கி வீடுகளை எரித்தனர். அவர்களது ஜாக்கெட்களை நாயர்கள் கிழித்தெறிந்த கொடுமை தொடுவெட்டி (மார்தாண்டம்), அருமனை என கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் நடந்தது.

1870ல் குமாரகோவில் திரு.வெள்ளையன் நாடார் தலைமையில் 12000 சாணார் சாதி மக்கள் கோவிலில் நுழைந்தனர். ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலில் அனுமதிக்காது நாயர்கள் தாக்கியதில் 150 சாணார் சாதியினர் கொல்லப்பட்டனர். இதுபோல பார்ப்பனீய இந்து கோவில்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் நுழையவிடாத நிலை திருவிதாங்கூர் முழுவதும் இருந்தது.

அய்யாவழி இப்படியான காலச்சூழலில் ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து தாழக்கிடப்பாரை தற்காப்பதுவே தர்மம் என அந்த மக்களின் உரிமைக்காக அய்யாவழி தனி மதமாக பிறந்தது. இல்லறமே உயர்ந்த அறமாக போதித்த அய்யா வைகுண்டர் இல்லறத்தையே கடைபிடித்தார். இயற்கையான வழியும், வாழ்வுமே அய்யாவழியின் அடிப்படை என்பதற்கு துறவறமின்மை, கண்ணாடியில் தன்னையே கண்டு வணங்குதல், சுயமரியாதைக்கு அடையாளமான தலைப்பாகை, ஒரே கிணற்றில் எல்லோரும் சமமாக தண்ணி அருந்துவது, சாதி பாகுபாடின்மை என பல அடையாளமாக உள்ளன (அய்யாவழி பற்றி முந்தைய பதிவுகள் இங்கே: அய்யாவழி மதத்தின் வரலாறு, பார்ப்பனீய பிடரியை உலுக்கிய அய்யாவழி!). ஒடுக்கப்பட்ட மக்களின் மாமனிதர்களில் அய்யாவும் ஒருவர்.

பார்ப்பனீய கொடுங்கோன்மை திட்டங்களையும், கொள்கைகளையும் அறவே எதிர்த்து பல தளங்களில் போராடியவர்கள் தான் அய்யா, நாராயணகுரு, அய்யன்காளி போன்ற எண்ணற்ற மாவீரர்கள். இன்று அவர்களை பார்ப்பனீய இந்துவெறி ஆர்.எஸ்.எஸ் சொந்தமாக்க முனைவது ஓநாய் அழுவதை தான் நினைவுபடுத்துகிறது. நம்பூதிரிகளும், நாயர்களும் நடத்திய கொடுங்கோன்மை கோரத்தாண்டவத்தை திருத்தி எழுத பார்ப்பனீயவாதிகள் முயல்கிறார்கள். இதன் பின்னணியில் சமகால சமூக அரசியல் காரணங்கள் இருக்கின்றன. கன்னியாகுமரியிலும், கேரளாவிலும் சங்பரிவாரங்களை 1970, 1980 களில் உருவாக்கி களம் அமைத்ததும், கலவரங்களை தூண்டியதும் நாயர்கள். தங்களது இழந்த அதிகாரம் ஆர்.எஸ்.எஸ் வழியாக கிடைக்குமா என அலையும் ஆதிக்கசாதிகளுக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் இன்றைய தலைமுறை பலிக்கடாவாக ஆக்கப்படுகிறது காலத்தின் சுழற்சி. ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றை அழிப்பது, திருத்துவதன் வழி பார்ப்பனீயவாதிகள் தங்கள் தவறுகளை ஆங்கிலேயர்கள், கிறிஸ்தவ மிசனரிகள் மீது போட்டு தப்பிக்க முயல்கிறார்கள். இதற்காக ஒடுக்கப்பட்ட மக்களின் வழிபாட்டு முறைகளில் சங்கப்பரிவாரங்களின் ஊடுருவலும், ஆர்.எஸ்.எஸ் கிளைகளும் உருவாக்கப்படுகின்றன. மாற்றத்தை உருவாக்கும் அமைப்புகளின் தனித்தன்மையை அதிக்கசக்தியினர் அழித்து, வரலாற்றை திரித்து குற்றப்பழியிலிருந்து தப்பிக்க பார்ப்பனீயம் துடிக்கிறது.

_________________
உதவிய நூல்கள்

  1. A Caste and Social Change in Colonial Kerala - essay by: D.Damodaran Namboodiri. Perspectives on Kerala History - The Second Milennium, P.J.Cherian (Ed)
  2. Religion and Sub-altern Agency - Dr. G.Patrick : University of Madras
  3. Slavery in Travancore, 1973, K.K. Kusuman
  4. Dr. Sobhanan, Temple Entry Movement and Sivakasi Riots, K.Kesavan, கோவில் நுழைவுப் போராட்டங்கள்
இந்த கட்டுரையை பூங்கா வலையிதழில் படிக்க இங்கே அழுத்தவும்

47 பின்னூட்டங்கள்:

செல்வநாயகி said...

நிறைய புது செய்திகளை அறிந்துகொண்டேன். நேரமெடுத்து எழுதப்பட்ட ஆழமான கட்டுரையாக உணர்கிறேன். நன்றி.

மாசிலா said...

சிறப்பான கட்டுரை திரு.
அரிய வரலாற்று செய்திகளை கொடுத்திருகிறீர்.

இப்பாவிகள் விதைத்த வினைகள் உங்களைப்போன்ற கட்டுரையாளர்கள் மூலம் பூமியிலிருந்து கிளம்பி, இலைவிட ஆரம்பித்துவிட்டது.

இக்காவாளிகள் செய்த பாவங்களை மறைக்க கும்பினி காரன், கிறித்துவம், இசுலாம் மீது பழி சுமத்தி அடிபட்டவர்களின் இன்றைய தலைமுறைகளின் கவனத்தை திசை திருப்ப பார்க்கின்றனர். நீங்கள் விளக்கி இருப்பதுபோல், இழந்த ஆதிக்கத்தை(?) மீட்க நாடகம் ஆடுகின்றனர். வேடம் போடுகின்றனர். பார்பானின் பெயரை சொல்லி, ஏனைய ஆதிக்க சக்திகள் செய்த அட்டகாசங்கள் கொஞ்ச நஞ்சமா? வரலாறுகளை இருட்டடிப்பதும், திருத்துவதும் பகல் கனவு காண்பதற்கு சமமே. உலகில் எங்கும் யாராலும் எதையும் மறைக்கவும், மாற்றவும், திருத்தவும் முடியாது. ஒருவனுக்கே சொந்தமான வரலாறாக இருந்தால் மாற்றிவிடலாம். ஆனால் இவைகள் பல சமுதாயத்தையே சார்ந்தது அல்லவா? ஒருவர் மறைத்தாலும் இன்னொருவர் மூலம் உண்மைகள் எத்தனை காலங்கள் போனாலும் வெடித்தே தீரும்!

பகிர்ந்தமைக்கு நன்றி.
தொடர்ந்து எழுதி வர வேண்டுகிறேன்.

வெற்றி said...

திரு,
நல்ல பதிவு. பல விடயங்களைத் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.

குழலி / Kuzhali said...

தகவல் திரட்டு இந்த பதிவு....

தருமி said...

ஆழமான வரலாற்று விஷயங்கள் ..
வரலாற்றில் மறைக்கப்பட்ட பக்கங்கள்..
மனசை நோக வைக்கும் உண்மைகள்..
வெளிக்கொணர்ந்தமைக்கு மிக்க நன்றி.

பணி தொடரட்டும்; சிறக்கட்டும்.

டண்டணக்கா said...

Lot of information... an un-told history, tons of injustice been done.
After reading, it pokes new questions about us - it's a win for your article.
Thanks for all your effort to bring out new details on this subject.

thiru said...

//மாசிலா said...
சிறப்பான கட்டுரை திரு.
அரிய வரலாற்று செய்திகளை கொடுத்திருகிறீர்...//
நன்றி!

//....வரலாறுகளை இருட்டடிப்பதும், திருத்துவதும் பகல் கனவு காண்பதற்கு சமமே. உலகில் எங்கும் யாராலும் எதையும் மறைக்கவும், மாற்றவும், திருத்தவும் முடியாது. ஒருவனுக்கே சொந்தமான வரலாறாக இருந்தால் மாற்றிவிடலாம். ஆனால் இவைகள் பல சமுதாயத்தையே சார்ந்தது அல்லவா? ஒருவர் மறைத்தாலும் இன்னொருவர் மூலம் உண்மைகள் எத்தனை காலங்கள் போனாலும் வெடித்தே தீரும்!//

உண்மை

thiru said...

//வெற்றி said...
திரு,
நல்ல பதிவு. பல விடயங்களைத் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.//

வருகைக்கு நன்றி வெற்றி!

thiru said...

//குழலி / Kuzhali said...
தகவல் திரட்டு இந்த பதிவு....//

நன்றி குழலி

thiru said...

//Dharumi said...
ஆழமான வரலாற்று விஷயங்கள் ..
வரலாற்றில் மறைக்கப்பட்ட பக்கங்கள்..
மனசை நோக வைக்கும் உண்மைகள்..
வெளிக்கொணர்ந்தமைக்கு மிக்க நன்றி.

பணி தொடரட்டும்; சிறக்கட்டும்.//

நன்றி அய்யா!

thiru said...

// டண்டணக்கா said...
Lot of information... an un-told history, tons of injustice been done.
After reading, it pokes new questions about us - it's a win for your article.
Thanks for all your effort to bring out new details on this subject. //

நன்றி! டண்டணக்கா

Thamizhan said...

நடந்த அநியாயங்கள் நெஞ்சை உலுக்குகின்றது.அதைவிடப் பெருந்துயரம் தற்போது நாடார் பெருமக்களில் சிலர் பி.ஜே.பி என்ற பச்சை மதவெறியர்களுடன் சேர்ந்திருப்பதுதான்.தங்கள் முன்னோருக்கு இழைக்கப்பட்டக் கொடுமைகளை அவர்கள் எப்படி ஒதுக்கமுடியும்?இவர்களில் யாராவது இந்த மதவெறிக் கும்பலுக்குத் தலைவராகவோ எந்த உறுப்ப்டியானப் பதவிகளோ வகிக்க முடியுமா?பார்ப்பனத் தூண்டுதள்களில் இவர்கள் வன்முறையில் ஈடுபட்டு என்ன பரிசும் பட்டமும் பெறப்போகிறார்கள்?

துளசி கோபால் said...

பதிவில் உங்க உழைப்பு தெரியுதுங்க.
புது விஷயங்களைத் தெரிஞ்சுக்க முடிஞ்சது.

ரொம்ப நன்றிங்க.

கொசு said...

அருமையான பதிவு திரு அவர்களே.

நீங்கள் பார்ப்பனரைப் பற்றி எழுதியதும் அரவிந்தனுக்கு காக்காய் வலிப்பு வந்து உங்கள் மீது தனிமனித தாக்குதல் தொடுத்து இருப்பதைப் படித்தீர்களா?

நீலகுண்டன் ஆர்.எஸ்.எஸ் என்னும் தீவிரவாத இயக்கத்தின் அடியாள்.

மரைக்காயர் said...

//..அன்றைய வர்ணாஸ்ரம சாக்கடையான திருவிதாங்கூரை சீர்படுத்திய இந்த மாமணிகளின் வரலாறு இன்றைய தலைமுறை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தெரியவில்லை. பாள்ளிப்பாடங்களிலும், வரலாற்று புத்தகங்களிலும் இவற்றை அறியாமல் வளர்ந்துவிட்டோம்...//


அன்றைய புதைக்கப்பட்ட வரலாறுகள் இன்றைய தகவல் யுகத்தில் மீண்டெழுந்து வரத்தொடங்கி விட்டன. உண்மை நீண்ட காலத்திற்கு உறங்கிக் கொண்டிருக்காது. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

thiru said...

//Thamizhan said...
நடந்த அநியாயங்கள் நெஞ்சை உலுக்குகின்றது.அதைவிடப் பெருந்துயரம் தற்போது நாடார் பெருமக்களில் சிலர் பி.ஜே.பி என்ற பச்சை மதவெறியர்களுடன் சேர்ந்திருப்பதுதான்.தங்கள் முன்னோருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை அவர்கள் எப்படி ஒதுக்கமுடியும்?இவர்களில் யாராவது இந்த மதவெறிக் கும்பலுக்குத் தலைவராகவோ எந்த உறுப்ப்டியானப் பதவிகளோ வகிக்க முடியுமா?பார்ப்பனத் தூண்டுதள்களில் இவர்கள் வன்முறையில் ஈடுபட்டு என்ன பரிசும் பட்டமும் பெறப்போகிறார்கள்?//

தமிழன் உணர்வுகளுக்கு நன்றி! நாடார் சாதியில் பண்ணையார்களாக உருவெடுத்த குடும்பத்தினர் இந்துத்துவ வெறி அமைப்புகளில் சங்கமித்தனர். வர்ணாஸ்ரம பார்ப்பனீயத்தின் புது வடிவமான ஆர்.எஸ்.எஸ் அவர்களது வீட்டிற்குள் நுளைந்தது 1970 களிலிருந்து துவங்கிய இந்த புதிய பண்பாட்டு படையெடுப்பு பல கலவரங்களையும் கன்னியாகுமரியில் உருவாக்கியது. ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, இந்து தேசம், பா.ஜ.க ஆகிய பார்ப்பனீய அமைப்புகள் இந்த கலவரங்களை திட்டமிட்டு நடத்தினர். இதற்கு மதச்சாயம் பூசி நாடார்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டனர். திரைமறைவில் இருந்து இவர்களை இயக்கியது வர்ணாஸ்ரம அடுக்கின் ஆதிக்கச்சாதிகள். இன்று காக்கி நிக்கர் படையில் அடியாட்கள் நாடார்களும் பிற ஒடுக்கப்பட்ட மக்களும். பார்ப்பனீயத்திற்கு இவர்கள் எப்போதுமே அடியாட்கள் தான். இன்று உண்மையான வரலாற்றை திரித்து எழுத சங்கப் பரிவாரங்கள் இறங்கியிருக்கும் பண்பாட்டு படையெடுப்பில் நாடார்களுக்கும் பங்கு உண்டு. கன்னியாகுமரியின் இந்த உண்மை வரலாறை இன்னொரு பதிவில் ஆதாரங்களுடன் பதிய முயல்கிறேன்.

உங்கள் கருத்துக்களுக்கும், திறனாய்விற்கும் நன்றி!

thiru said...

//துளசி கோபால் said...
பதிவில் உங்க உழைப்பு தெரியுதுங்க.
புது விஷயங்களைத் தெரிஞ்சுக்க முடிஞ்சது.

ரொம்ப நன்றிங்க.//

நன்றி அக்கா!

தேடி அறிகிற உண்மைகளில் சிலவற்றை மட்டும் இங்கே பதிவு செய்கிறேன். முன்னோர் அனுபவித்த வலியை வார்த்தைகளில் வடிக்க மூயன்று தோற்றுப்போகிறேன். என்றாவது ஒருநாள் நாம் நடந்த உண்மைகளை ஒப்புக்கொண்டு, சகமனிதர்கள் அனைவரும் சமஉரிமை பெற்றவர்களாக வாழமாட்டோமா என்ற பேராசை மட்டுமே மனதில் மிஞ்சுகிறது.

thiru said...

//கொசுபுடுங்கி said...
அருமையான பதிவு திரு அவர்களே.

நீங்கள் பார்ப்பனரைப் பற்றி எழுதியதும் அரவிந்தனுக்கு காக்காய் வலிப்பு வந்து உங்கள் மீது தனிமனித தாக்குதல் தொடுத்து இருப்பதைப் படித்தீர்களா?

நீலகண்டன் ஆர்.எஸ்.எஸ் என்னும் தீவிரவாத இயக்கத்தின் அடியாள். //

நண்பரே,

அவரது பெயரை பிழையாக எழுதியுள்ளீர்கள். உண்மையான பெயரிலேயே அழைப்போம். அது தான் பண்பு இல்லையா?

நீலகண்டன் எழுதுகிற தகவல்கள் ஆர்.எஸ்.எஸ்-க்கு நல்ல பெயரை உருவாக்க வேண்டும் என்பதற்காக பொய்யான திரித்தலாக அமைகிறது.ஆதாரங்களுடன் எழுதும் போது இந்த பொய்கள் மறையும்.
வரலாற்றின் ஆதாரங்கள் சங்கப்பரிவார சமையலறை வரலாற்றாசிரியர்களை எதிர்கொள்ளும் வல்லமை உடையவை.

(உங்கள் பின்னுட்டத்தில் பெயரை திருத்தம் செய்ய இயலவில்லை அதனால் பெயர் பற்றிய விளக்கம் அவசியமாகிறது)

வருகைக்கு நன்றி!

உங்கள் பெயரை கூப்பிட மனதிற்கு கடினமாக இருக்கிறது.

thiru said...

//மரைக்காயர் said...
//..அன்றைய வர்ணாஸ்ரம சாக்கடையான திருவிதாங்கூரை சீர்படுத்திய இந்த மாமணிகளின் வரலாறு இன்றைய தலைமுறை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தெரியவில்லை. பாள்ளிப்பாடங்களிலும், வரலாற்று புத்தகங்களிலும் இவற்றை அறியாமல் வளர்ந்துவிட்டோம்...//


அன்றைய புதைக்கப்பட்ட வரலாறுகள் இன்றைய தகவல் யுகத்தில் மீண்டெழுந்து வரத்தொடங்கி விட்டன. உண்மை நீண்ட காலத்திற்கு உறங்கிக் கொண்டிருக்காது. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.//

நன்றி நண்பரே! சங்கப்பரிவாரங்கள் வரலாற்றை திரித்து எழுத எடுக்கும் முயற்சிகளின் முன்னர்
நம் முன் இருக்கும் பணி அளவில்லாதது!

bala said...

//ஆடு நனைகிறது,ஓநாய் அழுகிறது//

திரு அய்யா,

எல்லாம் சரி.நீங்க ஏன் அழறீங்க?நீங்க வேற ஓநாயா?

பாலா

thiru said...

// bala said...
//ஆடு நனைகிறது,ஓநாய் அழுகிறது//

திரு அய்யா,

எல்லாம் சரி.நீங்க ஏன் அழறீங்க?நீங்க வேற ஓநாயா?

பாலா//

பாலா உங்களது அழுகைக்கு சாட்சியாக இந்த பின்னூட்டத்தை அனுமதிக்கிறேன், தலைப்பிற்கு சம்பந்தமில்லாமல் இருந்தாலும் கூட. நன்றாக அழுங்கள்! :))

நலமா?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பல தெரியாத சங்கதிகள்; அடிமை வியாபாரம் ஐரோப்பியாவில் தான் நடந்ததென இதுவரை எண்ணியிருந்தேன். வாசிக்க மலைப்பாக இருந்தது.அழகாகத் திரட்டித் தந்தமைக்கு நன்றி

ரவி ஸ்ரீநிவாஸ் said...

A general comment:Distorting or doctoring history is lot limited to Hindutva organisations.Communists have done it.The President of Iran too has done it.The 'official' history og communist party in USSR glorifed some, labelled some as revisitionists and stooges but truth prevailed.Now Iran is trying to doctor history on holocaust by organising a conference on it.I hold no brief for RSS but I know
that leftists and secularists cannot simply accuse RSS and get away with that.They keep mum about Irans attempt to doctor history.

கலை said...

உங்கள் பதிவுகளில் நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள முடிகின்றது.

thiru said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
பல தெரியாத சங்கதிகள்; அடிமை வியாபாரம் ஐரோப்பியாவில் தான் நடந்ததென இதுவரை எண்ணியிருந்தேன். வாசிக்க மலைப்பாக இருந்தது.அழகாகத் திரட்டித் தந்தமைக்கு நனறி//

யோகன்,

இன்னும் கொடுமைகள் ஏராளம். பார்ர்ப்பனீயத்திற்கு அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் வேதனைகளை பல புத்தகங்களில் தொகுத்தாலும் அடங்காது. அந்த வலியை சில பதிவுகளில் மட்டும் சொல்லிவிட முடியாது. பல்கலைகழகங்களில் பல ஆய்வுகள் வெளிக்கொண்டுவந்த முடிவுகள் புத்தகங்களாக வந்துள்ளன. அவை எளிதாக புத்தக கடைகளில் கிடைப்பதில்லை அல்லது தமிழில் இல்லை. இப்படியான ஆய்வு அறிக்கைகளை தேடி படிப்பதில் கிடைப்பதை இங்கு பதிவு செய்கிறேன் நண்பரே.

thiru said...

//ravi srinivas said...
A general comment:Distorting or doctoring history is lot limited to Hindutva organisations.Communists have done it.The President of Iran too has done it.The 'official' history og communist party in USSR glorifed some, labelled some as revisitionists and stooges but truth prevailed.Now Iran is trying to doctor history on holocaust by organising a conference on it.I hold no brief for RSS but I know
that leftists and secularists cannot simply accuse RSS and get away with that.They keep mum about Irans attempt to doctor history. //

Ravi,

As usual you have tried to manipulate the topic by blaming the historians. My reference here is not based on any ideology. I would like to know your opinion on the subject and not any more these type of comments that deviate the topics. Thanks for the accepting the fact that Hindutva forces are distorting the history.

Thiru

thiru said...

// கலை said...
உங்கள் பதிவுகளில் நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள முடிகின்றது.//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி கலை!

thiru said...

பாலா!

உங்களது இன்னொரு பின்னூட்டம் வெளியிடுவதாக இல்லை. இங்கு விவாதிக்கப்படும் விசயத்துக்கு சம்பந்தமில்லாது பதிவர் ஒருவரை நக்கல் செய்யும் அந்த பின்னூட்டம் வெளியிடும் தகுதிக்கு உரியதல்ல.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

I wrote a general comment.My point is a simple one.There is nothing wrong in pointing out attempts to doctor history.But that is not confined to RSS alone.When Iran govt. sponsors a conference to question the genocide of Jews
that also needs to be opposed.
It does not make sense to condemn RSS only.But how many blog posts have been written in Tamil on
that conference. What are your
views on this.It may be 'politically correct' to blame
RSS and brahminism as if they are
the only culprits but such a perspective is too naive to be credible. I may be the only Tamil blogger to say this.And I will
continue to say this. Slavery on a transcontinental scale was blessed
by the Church.Colonial govt. was second to none in exploiting Indians.You may be happy in ignoring these facts.

thiru said...

//ravi srinivas said...
I wrote a general comment.My point is a simple one.There is nothing wrong in pointing out attempts to doctor history.But that is not confined to RSS alone.When Iran govt. sponsors a conference to question the genocide of Jews
that also needs to be opposed.
It does not make sense to condemn RSS only.But how many blog posts have been written in Tamil on
that conference. What are your
views on this.It may be 'politically correct' to blame
RSS and brahminism as if they are
the only culprits but such a perspective is too naive to be credible. I may be the only Tamil blogger to say this.And I will
continue to say this. Slavery on a transcontinental scale was blessed
by the Church.Colonial govt. was second to none in exploiting Indians.You may be happy in ignoring these facts.//

ரவி,

வரலாற்றினை திருத்தி எழுதுதல் என்ற பொதுவான பிரச்சனையின் உங்கள் பார்வை சரி. வரலாறு எங்கு யாரால் திருத்தப்பட்டாலும் கண்டிக்கப்படவேண்டியதே. எனது பதிவு இந்துத்துவ வெறியர்களின் திரித்தல்களை அடையாளம் காட்டுவதும், உண்மையான சம்பவங்களை சுட்டிக்காட்டுகிறது. ஈரான் பற்றிய உங்கள் பார்வையை நீங்களே எழுதலாமே.

திருவிதாங்கூரில் அடிமைகள் வியாபாரமும், அடிமைகளை வைத்து கொடுமைப்படுத்தியதும் மறைக்கப்பட்ட உண்மைகள். அவற்றை வெளிக்கொண்டுவந்து தெரிந்துகொள்வேம்.

ஐரோப்பியா மற்றும் மேற்கு நாடுகளில் இருந்த அடிமைகள் வியாபாரம் உலகமே அறிந்தது. இதில் கிறிஸ்தவ மதத்தின் தலைமையி நிலையும் அனைவருக்கும் தெரியும். இவை அனைத்தும் கண்டிக்கப்பட்டது மட்டுமல்லாது இன்றும் அவை வரலாற்றில் பதிவாகி இருக்கிறது.

திருவிதாங்கூரின் பார்ப்பனீய அடிமை சந்தையை குறிப்பிடுகையில் 'அங்கே பார் அங்கேயும் அடிமை இருந்தது, அது ஏன் பேசவில்லை?' என இன்னொரு நாட்டை குறிப்பிட்டு பார்ப்பனீய வெறி RSSக்கு ஆதரவு திரட்டுகிறீர்களோ என உங்கள் எழுத்துக்கள் தோற்றம் தருகிறது.

ஐரோப்பிய அடிமைத்தனத்தோடு பார்ப்பனீய அடிமைத்தனத்தை ஒப்பிட முடியாத வேறுபாடு உண்டு. கண்ணால் கண்டாலே தீட்டு என்ற அளவு புறக்கணித்தலும் கலந்த சாதி அடிமைத்தனம் மிகவும் கொடூரமானது. இது பற்றி விரிவான பதிவே எழுதலாம்.

பார்ப்பனீயம் நடத்திய கொடூரங்களை மிசனரிகள், ஆங்கிலேயர்கள், மொகலாயர்கள் மீது பழி போட்டு தங்களை யோக்கிய சிகாமணிகள் போல காட்ட முனைகிற இந்துத்துவ வெறியர்கள் செயல் பற்றி உங்கள் கருத்து என்ன?

ஜோ/Joe said...

திரு,
நமது ஊரைப் பற்றியே நான் பல விடயங்களை அறியத் தந்தமைக்கு நன்றி!

Anonymous said...

/பார்ப்பனீயம் நடத்திய கொடூரங்களை மிசனரிகள், ஆங்கிலேயர்கள், மொகலாயர்கள் மீது பழி போட்டு தங்களை யோக்கிய சிகாமணிகள் போல காட்ட முனைகிற இந்துத்துவ வெறியர்கள் செயல் பற்றி உங்கள் கருத்து என்ன?/

that is your perception. brahmins were not in a position to decide what should be written as part of history, but the christians, whites and islamists were.

thiru said...

//ஜோ / Joe said...
திரு,
நமது ஊரைப் பற்றியே நான் பல விடயங்களை அறியத் தந்தமைக்கு நன்றி! //

நன்றி ஜோ! இன்னும் இது போன்ற வரலாற்று சம்பவங்கள் பல உள்ளன.

thiru said...

//Anonymous said...
/பார்ப்பனீயம் நடத்திய கொடூரங்களை மிசனரிகள், ஆங்கிலேயர்கள், மொகலாயர்கள் மீது பழி போட்டு தங்களை யோக்கிய சிகாமணிகள் போல காட்ட முனைகிற இந்துத்துவ வெறியர்கள் செயல் பற்றி உங்கள் கருத்து என்ன?/

that is your perception. brahmins were not in a position to decide what should be written as part of history, but the christians, whites and islamists were.//

Perception என தவறான சொல்லை பயன்படுத்தியிருக்கிறீர்கள் நண்பரே! இன்று இந்துத்துவ வெறி அமைப்புகள் வரலாற்றை திருத்தம் செய்வது நாடறிந்த உண்மை. கற்பனையல்ல!

கேள்வியில் பிராமணர்கள் என குறிப்பிடவில்லை, இருந்தும் நீங்கள் பிராமணர்கள் என குறிப்பிட்டு எழுத காரணமென்ன? அதெப்படி இந்துத்துவ வெறி என்றதும் குறிப்பிட்ட அந்த ஆதிக்கச்சாதி பெயரை சொல்கிறீர்கள்?

இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ள வரலாற்று சம்பவங்களில் எது உண்மையல்ல என சொல்கிறீர்கள்? அதற்கான ஆதாரம் என்ன? அறிந்துகொள்ளவே கேட்கிறேன்.

Anonymous said...

ஈழவ சாதி என்றால் என்ன? தெரிந்தவர்கள் புரிய வைப்பீர்களா?

Anonymous said...

/இன்று இந்துத்துவ வெறி அமைப்புகள் வரலாற்றை திருத்தம் செய்வது நாடறிந்த உண்மை. /

just wanted to point out your own contradiction.

If your argument that history was mangled by dictatrial forces, it is a noble act to set the history right to its truth.

if hindus realized that history was manipulated against its favor, they are doing noble act of 'fixing' it right.

you only reinforce my claim that dhimmies had the history documentation corrupted, and we need to correct it with all seriousness

thiru said...

//Anonymous said...
ஈழவ சாதி என்றால் என்ன? தெரிந்தவர்கள் புரிய வைப்பீர்களா?//

கேரளாவில் ஒடுக்கப்பட்ட சாதிகளில் ஒன்று. 19ம் நூற்றாண்டில் பார்ப்பனீய அடிமைத்தனத்தை அனுபவித்த மக்கள் இவர்கள்.

RamaniKandiah said...

ரவி,
இந்தத்தலைப்புக்கான வாதத்திலே நுழைய நான் விரும்பவில்லை. ஆனால், நீங்கள் சொன்ன "ஈரானின் அண்மைய கருத்தரங்கு" பற்றி; இங்கே அதை திரு பேசியிருக்கவேண்டுமென ஏன் எண்ணுகின்றீர்கள்? திருவிதாங்கூர் பற்றிய வரலாறு திரிக்கப்பட்டிருக்கின்றதென்று அவர் சொன்னால், நீங்கள் அவர் "ஈரானின் யூதப்பேரழிவு நிகழவில்லை" என்பது குறித்து ஏன் பேசவில்லையென்று கேட்பது, எவ்விதத்திலே சம்பந்தப்படுகிறது? இப்படியாகப் பார்த்தால், உலகத்திலே இது போன்று திரிக்கப்பட்ட, மறைக்கப்பட்ட அத்தனை நிகழ்வுகளையும் பட்டியல் தந்த பின்னர்தான் கட்டுரை எழுதவேண்டும். இது சாத்தியமா?

thiru said...

//Anonymous said...
/இன்று இந்துத்துவ வெறி அமைப்புகள் வரலாற்றை திருத்தம் செய்வது நாடறிந்த உண்மை. /

just wanted to point out your own contradiction.

If your argument that history was mangled by dictatrial forces, it is a noble act to set the history right to its truth.

if hindus realized that history was manipulated against its favor, they are doing noble act of 'fixing' it right.

you only reinforce my claim that dhimmies had the history documentation corrupted, and we need to correct it with all seriousness//

அனானி,

இந்த கட்டுரைக்கு உதவிய ஆதாரங்கள் இந்திய பல்கலைகழகங்களின் ஆய்வுகளில் வெளிவந்த ஆதாரப்பூர்வமான உண்மை. அந்த ஆய்வுகளுக்கு ஆதாரமான primary and secondary data இன்னும் ஆவணக்காப்பகங்களில் இருக்கின்றன. அவை ஓலைச்சுவடி வடிவிலும் பல வித ஆவணங்களாகவும் இருக்கின்றன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு முடிவை, காக்கி அரைநிக்கர் இந்துத்துவ வெறியர்களின் கற்பனை கதைகளால் மாற்றி விடுவது எளிதல்ல. கற்பனை நாவல் கதைகளுக்கு உதவும். வரலாற்றிற்கு ஆதரமே அடிப்படை.

//we need to correct it with all seriousness//

இதில் We என்று யாரை குறிப்பிடுகிறீர்கள்? இந்த correct என்பதன் பொருள் என்ன? எந்த அடிப்படையில் அவை நடக்கிறது/நடக்கவேண்டும்?

Anonymous said...

///திருவிதாங்கூர் பற்றிய வரலாறு திரிக்கப்பட்டிருக்கின்றதென்று அவர் சொன்னால், நீங்கள் அவர் "ஈரானின் யூதப்பேரழிவு நிகழவில்லை" என்பது குறித்து ஏன் பேசவில்லையென்று கேட்பது, எவ்விதத்திலே சம்பந்தப்படுகிறது?///

உண்மை. திசை திருப்ப பார்க்கின்றனர்

ரவி ஸ்ரீநிவாஸ் said...

திருவிதாங்கூரின் பார்ப்பனீய அடிமை சந்தையை குறிப்பிடுகையில் 'அங்கே பார் அங்கேயும் அடிமை இருந்தது, அது ஏன் பேசவில்லை?' என இன்னொரு நாட்டை குறிப்பிட்டு பார்ப்பனீய வெறி RSSக்கு ஆதரவு திரட்டுகிறீர்களோ என உங்கள் எழுத்துக்கள் தோற்றம் தருகிறது.

If you think so that is your view.Your blog post and some
of the responses give an impression
that the problem was only with brahminism and all was well with
what missionaries and colonial
government.That is what I want to
challenge.
பார்ப்பனீயம் நடத்திய கொடூரங்களை மிசனரிகள், ஆங்கிலேயர்கள், மொகலாயர்கள் மீது பழி போட்டு தங்களை யோக்கிய சிகாமணிகள் போல காட்ட முனைகிற இந்துத்துவ வெறியர்கள் செயல் பற்றி உங்கள் கருத்து என்ன?
That is bad.But pretending as if only brahminsism was bad is equally
unacceptable to me.Christians and Muslims were engaged in transcontinental slave trade.

ஆனால், நீங்கள் சொன்ன "ஈரானின் அண்மைய கருத்தரங்கு" பற்றி; இங்கே அதை திரு பேசியிருக்கவேண்டுமென ஏன் எண்ணுகின்றீர்கள்?
I never said so.All I have pointed out is that the left usually keeps
mum on such issues and accuses only the RSS.That is what I object to.Neither CPI,nor CPM, nor any of the Dravidian parties objected to
or raised their voices against the
conference in Iran.Why.The reason
is simple.Left is to day pro-muslim
and so are most 'secular' bloggers.
They see evil only when it comes to
Hindutva or Hinduism.I do not support RSS but I will not project RSS as the sole evil in the world.

Anonymous said...

mr. ravi,

see this

http://nanbanshaji.blogspot.com/2005/12/holocaust.html

dravidian and communist principles support any healthy discussion on any issue. nothing is beyond thinking rationally

Anonymous said...

"mr. ravi,

see this

http://nanbanshaji.blogspot.com/2005/12/holocaust.html

dravidian and communist principles support any healthy discussion on any issue. nothing is beyond thinking rationally."
-----------------------------------

Do you mean healthy thinking like
wishing the removal of Israel from
world map or denying the holocaust.
That blogger removed my comments on holocaust because I put them in an 'inappropriate' blog post.That is the level of discussion he is happy with you. You can join that jewish and israeli hater and claim that holocaust in a hoax.Dont worry about 'secularists'. They will keep mum.Anyone who is anti-USA is OK for them.If Hitler were alive and if he had taken anti-USA stand the 'left' and 'secularlists' may even support genocide or turn a blind eye.Look at their response to genocide in Sudan.China is least bothered as it has interests in
oil in Sudan.The Indian 'left' does not even murmur about it but
sheds tears for Saddam Hussein.

Anonymous said...

திரு எழுதிய ஒன்றரை பக்க
வலைப்பதிவில் உலக வரலாறையேவா எழுத முடியும்? பதிவுக்கு
சம்மந்தமில்லாமல் திசை திருப்புவதே வேலையா போச்சு.
கேரளாவில நடந்ததைப் பத்தி எழுதறதுக்கு ஜெர்மனியிலிருந்து,
ஜப்பான் வரை போக முடியுமா?

பொழுது இருப்பவர்கள் அதையெல்லாம் எழுத வேண்டியதுதானே?

டண்டணக்கா said...

Just to follow on the style of few comments here...

If Iran conducting conference, damn sure Jews will write about it and put their facts.
If whites slaved blacks, damn sure blacks will write about it and put their facts.
If colonial brit govt done damages, damn sure indians will write about it and put their facts.

Bottom lines is, At any event of oppression/injustice, the affected people will write about it and put their facts.

Writing across the fence is a rare occurrence....like jews writing about black slavery, blacks writing brit colony in india, etc - is very rate to see. It's natural that the first-hand affected/oppressed people to write about what happened to them. Just because they didn't write about the injustices across the fence, that doesn't mean what injustice done to them wasn't happened.

On the same line, I see this article. You question all about the authenticity of his details. Just like any other ethnicity in this earth, the author is giving first-hand information about his people...nothing wrong in that.

Raju said...

புற உலகம் அறியாத பல தகவல்களை தந்து கொண்டிருக்கிறீர்கள் , நன்றி
/// கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் நாயர்களை நேரில் காணும் போதும், பேசும் போதும் அழைக்க "ஏமானே (எஜமானே)" என குறிப்பிடுவது வழக்கமாக இருக்கிறது. ……அதே நாயர் நேரில் கண்ணில் படாத வேளை சூத்திரன் என திட்டுவதும் உண்டு.// முழுவதும் சரிதானா ? ஏனென்றால் நிலக்கிழார்களை மட்டுமே ஏமான் என்றழைக்கும் வழக்கம் இருக்கிறது . மன்னர்களிடம் பிச்சை பெற்ற சொத்துக்களால் (எவ்வாறு பெற்றார்கள்!!! என்பதை சொல்ல தேவையில்லை) வாழ்ந்த பல நாயர்களும் தங்களை ஏமான் என்றழைக்க நிர்பந்த படுத்தியிருக்கிறார்கள் என கேட்டிருக்கிறேன் . மற்ற நாயர்களை அவர்கள் முன்னாலும் சூத்திரன் என்றே சொல்வது வழக்கம்.

// இரணியல், தொடுவெட்டி, படந்தாலுமூடு போன்ற பகுதிகளில் அடிமைகளை விற்க சந்தைகள் இருந்துள்ளன.//
அடிமை சந்தை குறித்து பெரியவர்கள் யாரும் கூறியது இல்லை. இது எப்போது இருந்தது என்பதை தெரியபடுத்தவும். என் அறிவில் படந்தாலுமூடு தொடுவட்டி ஆகியன காளைசந்தை ஆகவே இருந்திருக்கிறது . மேல்துணி தடை , இன்னும் பல கொடுமைகள் இருந்தது பெரியவர்கள் சொல்ல கேட்டுருக்கிறேன். ஆனால் இவை யாவும் அநேகமாக 17 ஆம் நூற்றாண்டின் பிறகு தான் என கேள்வி. அப்போது தான் ஆண் வாரிசு இல்லாததால் மருமக்கள் வழி என கூறி தமிழர் அல்லாத வேற்று இனம் (இன்றைய திருவாங்கூர் இனம்) திருவாங்கூர் ஆட்சியை கைப்பற்றியது. பத்மநாபபுரம் பாதுகாப்பில்லாததை உணர்ந்து திருவனந்தபுரத்திற்கு குடி பெயர்ந்தார்கள். இதில் எட்டு வீட்டு பிள்ளைகளின் ( நாயர்களின் பிரிவா வெள்ளாளர்களின் பிரிவா என தெரியாது) சதி உண்டென கூற கேட்டுருக்கிறேன் . இன்றும் கேரளத்தில் மருமக்கள் வழி உண்டு.
மேலும் மார்த்தாண்ட வர்மாவுக்கு முன் உள்ள வரலாறு திருத்தபட்டிருக்க கூடும். செவி வழி வரலாறு முழுவதும் தவறு என ஒதுக்கிவிட முடியாது.

Anonymous said...

I thing today there is no heirs living on the earth of tiruvancore kings, I expect very soon no heirs to live on the earth those of who are liable to such a heinous crime to the mankind

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com